உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

238

மறைமலையம் - 30

இதழை என் மருகர் திரு. வ. திருவரங்கம் பிள்ளை கொண்டு திரு.வ. வந்தார்.

10-9-1928 இறைவன் அருளால் நான் எழுதிய மிக முக்கியமான நூல் 'மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்' கடைசிப் படிவம் இன்று அச்சாயிற்று.

24-11-1928 புதிதாகத் தொடங்கப்பெற்ற ஆங்கிலக் கிழமை இதழ் ‘Revolt’ வரப் பெற்றமைக்குத் திரு.ஈ.வே. இராமசாமி நாய்க்கர்க்கு மடல் விடுத்தேன்.

7-12-1928 ‘Revolt' இதழுக்கென 'The story of Ramayana' கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

1929

6-1-1929 மாயவரம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தம் தலைமையின் கீழ் உரையாற்றிய என் மகன் திருநாவுக்கரசுவின் பேச்சாற்றலைத் திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வியந்தார்.

1-2-1929 மறைந்த நண்பர் திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியின் மகன் வந்தார். தம் தந்தையாரைப் பற்றித் தாம் எழுதவிருக்கும் வரலாற்று நூலில் இணைப்பதற்கென என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தருமாறு வேண்டினார். நான் இணங்கினேன்.

13-3-1929 என் பழைய மாணவர், திருநெல்வேலி டி.கே. சிதம்பரநாத முதலியார், பி.ஏ., பி.எல், எம்.எல்.சி. என்னைக் காண வந்தார்.

14-3-1929 அடுப்பெரிக்கும் விறகுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பக்கிங்காம் கால்வாய் செப்பனிடப்பட்டு வருவதால் விறகு சுமந்துவரும் படகுகள் செல்ல முடியவில்லை. 9-3-1929 திருவையாறு வடமொழிக் கல்லூரியிலிருந்து பண்டிதர் உலகநாதப் பிள்ளை மடல் விடுத்தார். என் மகன் திருநாவுக்கரசு படிப்பில் ஆர்வம் செலுத்தாமல், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொற்பொழி வாற்றும் இடங்களுக்கெல்லாம் சென்று தானும் உரையாற்று

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/271&oldid=1592631" இலிருந்து மீள்விக்கப்பட்டது