உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

239

வதோடு, கட்சித் தொடர்பான உரையாடல்கள், சிக்கல்களிலும் ஈடுபடுகிறான் என்று அவர் எழுதியிருந்தார். அக் கடிதத்தை என் மனைவிக்குப் படித்துக் காட்டி மனம் வருந்தினேன்.

26-3-1929 சைவ சித்தாந்த மகாசமாஜச் செயலாளர் பாலசுப்பிரமணிய முதலியாரவர்களும் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் திருநெல்வேலிச் சைவ மாநாட்டுக்கு என்னை அழைத்தனர். வர இயலாது என்று சொன்னமையால், நான் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களை எழுதித் தருமாறு வேண்டினர்; இணங்கினேன்.

17-5-1929 திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் மடத்தில் தென்னிந்திய சைவர் மாநாடு கூடிற்று. தலைமையேற்றேன்.

30-5-1929 பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்.

5-9-1929 மாலையில் என் மாணவர் நா. துரைக்கண்ணன் வந்தார்; சிவஞானபோதமும் சிலப்பதிகாரமும் பாடங்கேட்கத் தொடங்கினார்.

1930

14-2-1930 'மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்' நூலுக்குரிய முன்னுரை ஆறாம் படிவம் அச்சாகி முடிந்து விட்டது. ஆங்கில வாசகர்க்கென ஆங்கிலத்தில் ஓர் அறிமுக வுரை எழுதிவிட்டால் வேலை முடிந்து விடும்.

21-2-1930 திருப்பாதிரிப்புலியூர் தென்னிந்திய சைவ மாநாட்டில் நான் ஆற்றிய தலைமையுரையைக் கண்டித்த திரு. பி. முத்தையா பிள்ளைக்குத் திரு. நா. துரைக்கண்ணன் எழுதிய மறுப்பு நேற்று கிடைத்தது. அதனை மேற்பார்த்துச் சில திருத்தம் செய்தேன்.

8-5-1930 அண்மையில் நடந்த சேலம் சேவாப்பேட்டை பைந்தமிழ்க் கழக மாநாட்டின் சிறப்பு என்னவென்றால், என் கருத்துப்படி ஒவ்வொரு சொற்பொழிவாளர்க்கும் பயணச் செலவுக்கும் உணவுச் செலவுக்கும் மேலாக உரூ.10 வழங்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/272&oldid=1592632" இலிருந்து மீள்விக்கப்பட்டது