உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 30 -

பட்டது. ஒவ்வொரு மன்றமும் இவ்வாறு செய்தால் தமிழாய் வுக்கு ஊக்கம் கிடைக்கும்.

25-5-1930 என் மாணவர் துரைக்கண்ணன் தாம் எழுதிய ‘மனோகரி’ எனும் தமிழ்ப்புதினத்துக்கு முன்னுரை வேண்டு மென்று கேட்டார். அந்நூலிலுள்ள இலக்கண, மரபுப் பிழை களையும், தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட வடமொழிச் சொற் களையும், சுட்டிக்காட்டி இப்பிழைகள் இல்லாமல் எழுதினால் அவர்தம் அடுத்த நூலுக்கு முன்னுரை தருவேன் என்று கூறினேன். அவர் மீண்டும் வற்புறுத்தினார்; அடுத்த முறை வரச் சொன்னேன்.

23-7-1930 கோவில்பட்டியிலுள்ள விருதை சிவஞான யோகிகள் எழுதிய 'கோயில்புரி புராண'த்தை வாழ்த்தி அவர்க்கு மடல் விடுத்தேன்.

25-9-1930 சைமன் ஆணைக்குழு அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்ப்பது குறித்து வருவாய்த்துறை ஆய்வாளர் என்னுடன் கலந்து பேசினார். அதற்குரிய செலவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் அவ் வேலையைச் செய்வேன் என்று கூறினேன்.

14-11-1930 திருவாசகத்தை அகவற்பா வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

1931

12-2-1931 மறைந்த நண்பர் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் மகனும், இலயோலா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான திரு. முத்துக் குமாரசாமி தம் கல்லூரித் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமையேற்குமாறு வேண்டினார்; இணங்கினேன்.

24-2-1931 காந்தி கட்சியினர் நடத்தி வரும் மறியல் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்துள்ளது. அவர் களுக்கும் காவலர்க்கும் இடையிலான சண்டை அச்சந்தரும் வகையிலுள்ளது. காந்தியின் திட்டம் எனக்கு எனக்கு உடன் பாடில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/273&oldid=1592633" இலிருந்து மீள்விக்கப்பட்டது