உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

241

7-4-1931 தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆண்டு விழாவை என் தலைமையில் நடத்து வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

10-4-1931 ஓய்வுபெற்ற தாசில்தாரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கௌரவத் தலைவருமான திரு. மா.வே. நெல்லையப்ப பிள்ளை விருந்துக்கு அழைத்தார். நானும் திரு. திருவரங்கமும் சிந்துபூந்துறையிலுள்ள அவர்தம் அருமையான வீட்டுக்குச் சென்று விருந்துண்டோம். நல்ல பேச்சாளரும், தமிழறிஞரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கல்லூரி விரிவுரையாளருமான திரு. ரா.பி.சேதுப் பிள்ளையும் எங்களுடன் விருந்துண்டார்.

23-5-1931 நுரையீரல் நோயினால் என் மாணவர் மணி திருநாவுக்கரசு மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்; நானும் என் மனைவியும் அழுதோம்.

28-5-1931.... மறைந்த மாணவர் மணி திருநாவுக்கரசைப் பற்றிய குறிப்புகளுண்டா என்றறிய 20 ஆண்டுக்கு முன்னர் எழுதிய என் நாட்குறிப்பேடுகளைத் தேடினேன். குறிப்பெதுவும் கிடைக்கவில்லை...

7-7-1931 என் கடைசி மகன் பம்பாயிலிருந்து திரும்பினான். காந்தி இயக்கம் முழு வீச்சிலிருக்கிறது என்றும், கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன என்றும், அவன் கூறினான்.

16-7-1931 திரு. சுரேந்திரநாத் ஆரியா என்னைக் காண வந்தார். இறைவன் நடராசனைப் பற்றித் தாம் எழுதிய நூலை எனக்குக் கொடுத்தார்.

23-7-1931 திரு. சுரேந்திரநாத் ஆரியா எழுதிய ‘நடராச தரிசனம்' சிறு நூலைப் படித்தேன்.வடசொற்கள் ஏராளமாகக் கலந்து, பிழைமிக்க நடையில் எழுதப்பெற்றிருக்கும் இந்நூற்கு அவர் கேட்டுக் கொண்டபடி நன்மதிப்புரை எழுதித் தருவது எப்படி? என்று தெரியவில்லை.

23-10-1931 பெரும் அறிவியல் அறிஞர் எடிசன் சில நாளுக்கு முன்னர் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். அரியதொரு மேதையை உலகு இழந்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/274&oldid=1592635" இலிருந்து மீள்விக்கப்பட்டது