உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 30

11-12-1931 இன்று முழுவதும் மேசை இழுப்பறைகளைத் தூய்மைப்படுத்தினேன்; பழைய மடல்களைக் கிழித்தெறிந்தேன்.. நூல்களையும் 33 ஆண்டு நாட்குறிப்பேடுகளையும் ஒழுங்குற அடுக்கி வைத்தேன்.

1-1-1932

1932

Him that giveth gold and true bliss,

Him that uniteth enjoyment and riches, Him that removeth all my sins,

Him whoes real nature eludes under

My Father that came easily,

standing,

The Dweller in Aroor beautiful with swan-living fields, can I forget?"

(பொன்னும் மெய்ப்பொருளும்).

4-1-1932 பிற அரசியல் தலைவர்களுடன் மகாத்மா காந்தி இன்று கைது செய்யப்பட்டார் எனும் துயரச் செய்தி அறிந் தேன். சாதியில் உழலும் இந்திய மக்களுக்காகக் காந்திய வர்கள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பனவழிபாடு முதலான வற்றில் உழன்று, சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக் குரிய தகுதியில்லை. எங்கும் கலகம் ஏற்பட் டுள்ளது. கொடுமையான அடக்குமுறைகளை அரசாங்கம் கைக்கொண்டு உள்ளது. நம் மக்களுக்கும் அரசாங்கத் துக்கும் நல்லறிவூட்டி மீண்டும் அமைதி தழைக்க ஈசன் அருள் புரிவானாக!

11-1-1932

காங்கிரசுக்காரரையும்

தொண்டரையும் அரசாங்கம் கொடுமைப்படுத்தும் செய்திகளை நாளேடுகளில் படித்தும் கேள்வி மூலமாக அறிந்தும் மனவேதனை அடைகி றேன்.

14-1-1932 திரு அரங்கசாமி என்னைக் காண வந்தார். அரசாங்கத்துக்கெதிரான அரசியற் கிளர்ச்சியின் பயனின்மை குறித்து நெடுநேரம் உரையாடினோம்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/275&oldid=1592637" இலிருந்து மீள்விக்கப்பட்டது