உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

243

15-1-1932 சைனா பசாருக்கருகே மறியல் செய்த காங்கிரசுத் தொண்டர் ஒருவரைக் காவலர் கொன்றனர் எனும் துயரச் செய்தி அறிந்தேன்.

1-3-1932 கைவல்ய சுவாமிகள் என்னைக் காணவந்தார். சமயம், சீர்திருத்தம் ஆகியன பற்றி நெடுநேரம் உரையாடி னோம். என் கருத்துகளை அவர் ஏற்றுக் கொண்டார்.

3-3-1932 கழகத்தின் இதழான செந்தமிழ்ச் செல்விக்கு ஒவ்வொரு திங்களும் கட்டுரை எழுத இயலுமா என்று வினவி என் மாப்பிள்ளை கடிதம் எழுதியிருந்தார்.

7-3-1932 20ஆம் தேதிக்குப் பிறகு, என் மூன்றாம் மகன் காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர விருப்பதாக என் மாணவர் வீரையன் மடல் எழுதினார். இயக்கத்தில் சேராமல் நேராக வீடு வந்து சேருமாறு நானும் என் மனைவியும் எம் மகனுக்கு கடுமையாகக் கடிதம் எழுதினோம்.

சி

18-6-1932 என் கடைசி மகள் திரிபுரசுந்தரிக்கும் என்னருமை மாணவர் குஞ்சிதபாதத்துக்கும் திருமணம் நடந்தது.

25-9-1932 இன்று பிற்பகல் திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வந்தார். அவர் முன்னிலையில் என் மூன்றா வது மகன் என் விருப்பாவணத்தைப் படித்துக் காட்டினான்.

.

25-10-1932 திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத் திலிருந்து சுவாமி கிருஷ்ணானந்தர் வந்தார். இரமண மகரிஷி என் நூல்களைப் படிப்பார் என்றும், அவற்றைப் பாராட்டியும் என்னைப் புகழ்ந்தும் பல கூறுவார் என்றும் அவர் கூறினார்.

1933

25-1-1933 இறைவன் அருளால் என் இரண்டாவது பெரு நூலான மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை எழுதி முடித்தேன்.

3-2-1933 சூலை 1909இல் தொடங்கிய ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி?' பல தடைகளுக்குப் பிறகு இப்போதே எழுதி முடிக்க இயன்றது. இறைவன் அருளை என்னென்பது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/276&oldid=1592638" இலிருந்து மீள்விக்கப்பட்டது