உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

-30

மறைமலையம் - 30

22-3-1933 என் மாணவர் இளவழகன் வந்தார். தாம் தொடங்கவிருக்கும் ‘முல்லைக்கொடி' ருவார இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதுமாறு வேண்டினார்.

20-5-1933 தமது தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் பெறுவதற் கெனத் திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, அவர் களும், அவருடன் திரு. அண்ணாமலையும் வந்தனர். நெடுநேரம் உரையாடினோம். சான்றிதழ் தருவதற்கு இணங்கி னேன்.

29-5-1933 திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளைக் கென சான்றிதழ் எழுதினேன். உடன் ஒரு கடிதமும் எழுதினேன்.

18-6-1933 திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை திரு.தெ. வந்தார். சான்றிதழ் கொடுத்தமைக்கு நன்றி கூறினார். தாம் எழுதிய 'வள்ளுவரும் மகளிரும்' எனும் நன்னூலைக் கொடுத்தார்.

10-9-1933 தமக்குத் திருமணம் நடக்கவிருக்கும் செய்தியை என் மாணவர் நா. துரைக்கண்ணன் தெரிவித்தார்.

16-10-1933 தமது பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு என்னை முகவுரை எழுது மாறு வேண்டி சுவிட்சர்லாந்திலிருந்து திரு. சு. ஆரியா விடுத்த கடிதம் வரப்பெற்றேன்.

18-10-1933 ஆரியாவின் நூலுக்கு முகவுரை எழுதி

வருகிறேன்.

1934

5-1-1934 நானே ஆசிரியனாகவும், அச்சடிப்போனா கவும், வெளியீட்டாளனாகவும், மெய்ப்புத் திருத்துவோ னாகவும், எழுத்தராகவும், பணியாளனாகவும் வேலை செய்ய வேண்டியிருப்பதால், உண்டு, உறங்கி, ஓய்வெடுப்ப தற்கும் கூட எனக்கு நேரம் இருப்பதில்லை.

9-4-1934 வரும் சூன் திங்கள் இடையில் நான் தொடங்க விருக்கும் ‘Ocean of Wisdom' இதழுக்குரிய அறிவிப்பை எழுதி, அச்சுக்குக் கொடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/277&oldid=1592639" இலிருந்து மீள்விக்கப்பட்டது