உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

245

11-6-1934 திருநெல்வேலி என் தலைமையில் சென்னை மாகாணத் தமிழறிஞர் மாநாடு கூடியது,

14-6-1934 நீலா அணியம் செய்த வடசொற்றமிழ் அகர வரிசையைப் படித்துத் திருத்தினேன்.

22-6-1934 சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டுச் செயலாளர் பண்டிதர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை யவர்கள் என்னைக் காணவந்தார்.

24-6-1934 பெருந்தமிழ் மருத்துவர் பிச்சாண்டிப் பிள்ளை என்னைக் காண வந்தார்.

11-9-1934 தமிழர் பெரும்பாலோர் பொய்யராகவும் நேர்மையற்றோராகவும் உள்ளனர். தமிழ் கற்றுக் கொள்வ திலோ தமிழ் நூல்களை வாங்குவதிலோ அவர்களுக்கு நாட்டம் இல்லை. என்னுடைய நாற்பதாண்டுப் பணியின் மூலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலருக்கு மேல் வேறு யார் மீதும் என்னால் பாதிப்பு ஏற்படுத்த இயலவில்லை.

17-9-1934 தொகுதி 1 முதல் தொகுதி 6 பகுதி 1 வரை தமிழ்ப் பேரகராதி வரப் பெற்றமையை அறிவித்துத் திரு. ச. வையாபுரிப் பிள்ளைக்கு மடல் விடுத்தேன்.

1935

1-1-1935 நான் தொடங்கவிருக்கும் ஆங்கில இதழுக்குரிய தலையங்கக் குறிப்பை எழுதலானேன்.

8-2-1935 மிகுந்த முயற்சிகள் எடுத்துப் பழந்தமிழ் இலக்கியங் களைப் பதிப்பித்த தமிழறிஞர் உ.வே. சாமிநாத அய்யரின் எண்பதாமாண்டுப் பிறந்தநாற் விழா மார்ச்சு 6இல் நிகழ வுள்ளது. அவ்விழாவில் என்னைப் பங்கேற்க திரு. கே.வி. கிருட்டிணசாமி அய்யர் அழைப்பு விடுத்தார்.

22-4-1935 சுந்தர ஓதுவா மூர்த்திகள் மாலையில் வந்தார். தம் தேவாரப் பாடல்களையும் சிறுத்தொண்டர் கதையையும் இசைத்தட்டில் இசைத்தும், திருவாசகத்தைப் பாடிக் காட்டியும் இரவு 1 மணி வரை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/278&oldid=1592640" இலிருந்து மீள்விக்கப்பட்டது