உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

-30

மறைமலையம் - 30

18-5-1935 எனது 18ஆம் அகவையில் குறள் முழுவதும் மனப்பாடம் செய்தேன். இப்போது 40 ஆண்டுகள் கழித்து அவற்றில் பாதிக்கு மேல் நினைவிலிருக்கின்றன.

7-6-1935 தமிழில் ஜஸ்டிஸ் இதழ் கொண்டுவரவிருப்பதை வாழ்த்தி, ஜஸ்டிஸ் அச்சகக் சிறப்புச் செயலாளர்க்குக் கடிதம் விடுத்தேன்.

22-6-1935 ஞானியார் சுவாமிகள் எம் இல்லம் வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றோம். நகர் முழுவதும் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். அப்பர் சுவாமிகளைப் பற்றி அவர் உரையாற்றினார்.

28-6-1935 சென்னைப் பல்கலைக்கழக இடைநிலைத் தேர்வுக்குரிய பாடப்புத்தகங்களிலிருந்து என் ‘அறிவுரைக் கொத்து' நூலை விளக்க வேண்டும் என்று எழுதிவரும் தினமணி, சுதேசமித்திரன் போன்ற ஏடுகட்கு எதிராக எனக்கு ஆதரவு நல்குமுறையில் நேற்றைய விடுதலை’ இதழ், தலையங்கம் வரைந்தது.

9-8-1935 கோவை சி.கே. சுப்பிரமணிய முதலியாரவர் கட்குச் 'சிந்தனைக் கட்டுரைகள்' நூலையும் ஒரு மடலையும் விடுத்தேன்.

20-8-1935 எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூல்களுக்கென திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர்க்கு விடுத்த ரூ. 3-10-10 பணவிடை திரும்ப வந்தது. அந்நூல்கள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டன வென்று அவர் மடல் எழுதினார்.

25-8-1935 (கே.பி) சுந்தராம்பாளின் ‘பக்த நந்தனார்' திரைப்படக் காட்சியைப் பார்ப்பதற்கென என் மனைவி, மகள், வீட்டுப் பணிப்பெண் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

1-9-1935 இறைவன் அருளால் ‘தொலைவிலுணர்தல்' இன்று எழுதி முடித்தேன். பல தடைகள் ஏற்பட்டமையால் இந் நூலை எழுதுவதற்கு ஏறத்தாழ 25 ஆண்டாயின.

21-9-1935 மயிலை வேங்கடசாமியவர்களும், அவர் தம் நாட்டுக்கோட்டை நண்பர் இருவரும் மாலையில் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரையாடினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/279&oldid=1592641" இலிருந்து மீள்விக்கப்பட்டது