உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

247

3-11-1935 ஊழியன்' இதழிலிருந்து திரு. பழநியாண்டி குருக்களும், திரு.இ. சிவமும் என்னைக் காண வந்தனர்; பொங்கல் சிறப்பிதழுக்குக் கட்டுரை தருமாறு வேண்டினர்.

1936

13-1-1936 வரும் சூலைத் திங்களில் எனது அறுபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளை முடிவு செய்தற்கென அமைச்சர் பி.டி. ராசன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் கூட்டம் நடத்தப்பட்டது என்று அறிந்தேன்.

21-1-1936 அரசர், மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தியறிந்தேன்.

10-2-1936 கெயிட்டி திரையரங்கு சென்று ‘பக்த நந்தனார் பார்த்தேன், சுந்தராம்பாளின் அருமையான நடிப்பு, சமய உணர்வு மிக்கதாய் உளத்தை நெகிழ்த்தி விழுமிய நிலையை அடையச் செய்தது.’

13-2-1936 சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அண்ணல் தங்கோ என்ற கவிஞரும் அவர்தம் நண்பரும் நேற்று என்னைக் காண வந்தனர். தமிழின் சிறப்பைப் பற்றிய அவர்தம் அருமை யான பாடல்களை அவர் படித்துக் காட்டினார். எனது தமிழ் இதழில் அவற்றுக்கு மதிப்புரை வரைவேன் என்றேன். நெடு நேரம் உரையாடினோம்.

15-3-1936.... 13ஆம் நாளன்று, தமது அறுபதாவது அகவையில் பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் மறைந்தார் என்றறிந்தேன். ஈகைப் பண்புமிக்கவர் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஆன்மா அமைதி பெறட்டும்!

15-4-1936 ‘Ocean of Wisdom' நான்கு இதழ்களுடன் ஒரு கடிதமும் நாகர்கோயில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சிதம் பரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேன். தமது ‘திராவிடரும் ஆரியரும்' நூலில் என்னைப் பற்றி இவர் விதந்து போற்றி எழுதியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/280&oldid=1592642" இலிருந்து மீள்விக்கப்பட்டது