உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

-

❖ மறைமலையம் - 30

20-4-1936 ஆங்கிலம் படித்த இளைஞர் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். பல்கலைக்கழகப் படிப்பால் இவர்கட்கு ஒரு பயனும் இல்லை. வேலை வாய்ப்புப் பெறுவ தற்கென்று அனைவரும் ஏன் கல்வி பயில வேண்டும். வேளாண்மை, வணிகம், தொழில்துறை போன்றவற்றில் இவர்கள் ஏன் இறங்கக் கூடாது?

28-5-1936 திரு. வையாபுரிப் பிள்ளையின் பரிந்துரை மூலமாகத் தமிழ்ப் பேரகராதியின் கடைசி மூன்று பகுதிகளை அரசாங்க அச்சகக் கண்காணிப்பாளரிடமிருந்து வரப் பெற்றேன்.

3-7-1936 தண்டபாணி தேசிகர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் ‘பட்டினத்தார்’ திரைப்படம் சென்று பார்த்தோம்.

14-7-1936 என் முன்னாள் மாணவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு தலைவருமான திரு. சோம சுந்தர பாரதியாரிடமிருந்து அன்பான கடிதம் வரப் பெற்றேன்.

5-9-1936 எனது பழைய நாட்குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்து, என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்தேன்.

13-9-1936 திரு. மயிலை வேங்கடசாமி வந்தார். என் நூலகத்திலுள்ள நூல்களையும், என் நூல்களையும் படித்தார். இடையிடையே இலக்கியம் பற்றிப் பேசினோம்.

12-12-1936 எட்டாம் எட்வர்டு அரசர் தம் காதலிக்காக அரியணையைத் துறந்தார் என்று அறிந்தேன். அரசரின் காதல் உண்மையானதாக நீடித்து நிற்குமாயின், அவர்தம் அளப்பரிய தியாகம் மேன்மை பெற்றதாய் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

1937

2-1-1937 Ocean of Wisdom 2ஆம் தொகுதிக்குரிய கையொப்பக் கட்டணமாக வெ. ப. சுப்பிரமணிய முதலியாரிட மிருந்து ரூ.3-4-0 பணவிடைபெற்றேன்.

9-1-1937 Why Hindi should not be made the common lan-

guage of India எழுதத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/281&oldid=1592643" இலிருந்து மீள்விக்கப்பட்டது