உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

249

21-1-1937 மாலையில் திரு. சீனி. வேங்கடசாமி வந்தார். 'அறிவுரைக் கொத்து' வாங்கினார். தமது 'கிறிஸ்தவமுந் தமிழும்' நூலுக்கு 'ஞானசாகர'த்தில் மதிப்புரை எழுத வேண்டி

னார்.

12-7-1937 பண்டித மு. கதிரேசன் செட்டியாரவர் களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும், அண்ணாமலை முதலியாரவர்களும் என்னைக் காண வந்தனர்.

5-9-1937 திரு. சோமசுந்தர பாரதியார் என்னைக் காண வந்தார். ‘திருவள்ளுவரும் தொல்காப்பிய ஆராய்ச்சியும்’ நூலை எனக்குக் கொடுத்தார்.

4-10-1937 சென்னை கோகலே அரங்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்றுத் தனித் தமிழில் உரையாற்றினேன்.

5-10-1937 நேற்றிரவு 11 மணிக்கே வீடு திரும்ப முடிந்தது. திரு. சோமசுந்தர பாரதியார் உட்பட பதின்மர் எனக்குப் பிறகு உரையாற்றினர். நான் முடிவுரை கூறினேன்.

21-11-1937 வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்களின் குறிப்புரையுடன் கூடிய ஆரணிய காண்ட சாரம், கிட்கிந்தா காண்ட சாரம் வரப்பெற்றேள்.

1938

1-1-1938 என் ஆசிரியர் சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறேன்.

26-2-1938 கெயிட்டி திரையரங்கு சென்று 'அம்பிகாபதி’ பார்த்தோம். இறுதிப் பகுதி மட்டும் துயரமிக்கதாய் நன்றாக இருந்தது. இன டை ப் பகுதிகள் தேவையற்றனவாய் மோசமாக ருந்தன.

15-3-1938 விநோத ரசமஞ்சரியும், பலதுறைக்கோவையும்

வாங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/282&oldid=1592644" இலிருந்து மீள்விக்கப்பட்டது