உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் - 30

24-4-1938 ஆறுமுக நாவலரைப் பற்றிய என் பாராட்டுரை வெளிவந்திருக்கும் ‘நாவலர் நினைவு மலர்’ படியை யாழ்ப் பாணம் பண்டிதர் கே.பி. இரத்தினம் எனக்குக் கொடுத்தார்.

3-6-1938 மாலையில் என் மகன் மாணிக்கம் மகிழுந்து அழைத்து வந்தான். கோடம்பாக்கம் சென்றோம். வழியில் சி.டி. நாயகம் அவர்கள் வீடு சென்றோம். தென்னிந்தியப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்குவதைக் கண்டித்துக் கடந்த 34 நாளாக உண்ணாநோன்பிருக்கும் திரு. செகதீசனைக் கண்டோம். எலுமிச்சம் பழச்சாறு மட்டுமே சிறிது உண்டு வருவதால் அவர் உடல் வலுவிழந்து காணப் பட்டார்; பிறர் உதவியுடனே கொஞ்சம் நடக்க இயன்றது. முதன்மை அமைச்சர் இராசகோபாலாச்சாரியின் வீட்டுக் கெதிரே இரவும் பகலும் 4 நாளாக உண்ணா நோன்பிருக்கும் திரு. பொன்னுசாமியையும் கண்டோம். உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழரின் உணர்வுகளைத் தன்னேரில்லாத தியாகத்தின் வாயிலாக இவ்விளைஞர் இருவரும் தட்டி எழுப்பியுள்ளனர்.

4-6-1938 சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாடு நேற்று மாலை என் தலைமையில் வெற்றியுடன் நடந்தேறியது. சண்முகா னந்த சுவாமியும், அருணகிரி சுவாமியும், தெலுங்குப் புலவர் அனுமந்தராவும் எனக்குப்பின் பேசினர். கூட்டம் முடிந்ததும் சுவாமிகள் இருவரும் இராசகோபாலாச்சாரியின் வீட்டுக்கு முன்பு மறியல் செய்யப் புறப்பட்டனர்.

21-6-1938 என் மூன்றாவது மகன் திருநாவுக்கரசு, மூன்று திங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபடப்போவதாக அறிந்தேன். 57 நாளாக உண்ணாநோன் பிருந்து தமிழுக்காக உயிர் துறக்கப்போகிறார் திரு. செகதீசன். இறைவன் அவர்க்கு அருளட்டும்!

26-6-1938 ‘தமிழ் வாழ்க', 'இந்தி ஒழிக' என்று முழக்க மிட்டுக் கொண்டு ஏராளமான மக்கள் கடற்கரைக் கூட்டத் துக்குச் செல்வதறிந்து மகிழ்கிறேன்.

9-8-1938 தமிழ்த் தாயைக் காக்கும்பொருட்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசிய என் மகன் திருநாவுக்கரசுக்கு ஆறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/283&oldid=1592645" இலிருந்து மீள்விக்கப்பட்டது