உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

251

மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. தமிழுக்குத் தீங்கிழைப்போர்க்கு உருத்திரன் தக்க தண்ட

வழங்கட்டும்.

னை

11-9-1938 திருவல்லிக்கேணிக் கடற்கரையில் என் தலைமை யின்கீழ் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் நடத்தப் பெற்றது. ஓர் இலட்சத்துக்கும் மேலான கூட்டம் குழுமியிருந்தது. ஒலி பெருக்கி மூலமாக அனைவரும் கேட்குமாறு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது.

10-10-1938

இராவ்சாகிபு வெ.ப. சுப்பிரமணிய

முதலியாரின் ‘அகலிகை வெண்பா' அன்பளிப்பாக வரப் பெற்றேன்.

15-11-1938 சைதாப்பேட்டை துணை மாஜிஸ்டிரேட்டிடம் சென்றேன். 21ஆம் தேதியன்று கோவை நீதி மன்றத்தில் 'குடி அரசு’ ஆசிரியர் திரு. ஈ.வே. கிருட்டிணசாமி நாய்க்கருக்கும் விடுதலை' ஆசிரியர் திரு. முத்துசாமிப் பிள்ளைக்கும் சான்று கூற வேண்டும் என்றார்.

25-12-1938 பண்டித கோவிந்தராச முதலியார் எழுதிய 'அம்பிகாபதி' நாடகம் வரப்பெற்றேன். படித்தேன். கலைத் தன்மை சிறிதும் இல்லை. கதை மாந்தரைக் கையாண்ட பாங்கும் நன்றாக இல்லை. வரலாற்றுக் கதை என்றாலும் அதில் செய்யப் பட்டுள்ள மாற்றங்கள் சுவையையும் ஆர்வத்தையும் ஊட்டு வனவாக இல்லை. அம்பிகாபதியைப் பற்றி ஒரு புது நாடகம் நானே எழுத எண்ணியுள்ளேன்.

26-12-1938 சுயமரியாதை பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தலைவர் திரு. ஈ.வே. இராமசாமிப் பெரி யாரை வாழ்த்தி நான் எழுதிய கடிதம் அவர்தம் வார ஏடான குடிஅரசு’ வில் வெளியாயிற்று.

1939

15-3-1939 என் அருமை நண்பர் தவத்திரு விருதை சிவஞான யோகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் தம் மனைவியார் இலக்குமி அம்மையார்க்கு மடல் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/284&oldid=1592646" இலிருந்து மீள்விக்கப்பட்டது