உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் லயம் -30

29-3-1939 திரு. கனகராயருடன் ‘பாரகன்’ திரையரங்கு சென்று ‘இராமலிங்க சுவாமிகள்’ திரைப்படம் பார்த்தேன். நெஞ்சை உருக்கும் இனிய காட்சி.இராமலிங்கராக நடித்தவரும் சிறுவர் இருவரும் அருமையாக நடித்தனர். தமிழ்ப் பாடல்களை இனிய தமிழ்ப் பண்களில் இசைக்காமல் இந்துத்தானி பாணியில் பாடியமையே படத்தில் உள்ள குறைபாடு.

29-6-1939 என்னிடமிருந்து விநாயகப் புராணச் செய்யுள் நூலைப் பெற்றுச் செல்வதற்கெனத் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வீட்டுக்கு வந்தார்.

16-7-1939 தமிழ்த் திருமண மாநாட்டு அமைப்பாளர்கள் என்னை கோகலே அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர். வரவேற்புக் குழுத் தலைவர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர் களும், சோ. பாரதியாரவர்களும் என்னைப் புகழ்ந்து சில சொல்லி, கூட்டத் தலைமை ஏற்க வேண்டினர். தமிழ், ஆரிய திருமண முறைகளைப் பற்றி ஒன்றரை மணி நேரம் உரையாற்றி னேன். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர்க் கூட்டம் முடிந்தது.

23-7-1939 இ ன்றைய Sunday Observer இதழில் 'The Tamilian and Aryan Thought' எனும் என் கட்டுரையும் தமிழ்த் திருமண மாநாட்டுத் தலைமையுரையும் வெளிவந்தன.

29-8-1939 ஈ.வே. இராமசாமி நாயக்கரவர்களைப் பற்றித் திரு. சாமி. சிதம்பரனார் எழுதிய வரலாற்று நூலுக்கு என் முன்னுரை வேண்டி சுயமரியாதை இயக்கத்தினரான திரு. குரு சாமி என்னைக் காண வந்தார். இதைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பதாகக் கூறினேன்.

66

6

7-11-1939 என் மகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?” எனும் சிறு நூல் வரப் பெற்றேன். நன்றாக எழுதப்பட்டுள்ளது.

28-12-1939 அனைத்திந்திய தமிழ்ச் சமய மாநாடு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கென சுவாமி சண்முகா னந்தா, சுவாமி அருணகிரி, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை, சண்முகம் முதலியார் ஆகியோர் வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/285&oldid=1592647" இலிருந்து மீள்விக்கப்பட்டது