உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

1940

253

2-1-1940 மாலையில் திரு. வேலாயுதம் வந்தார். டாக்டர் சி.ஆர். ரெட்டியின் மணிவிழாவில் கலந்து கொண்டு உரை யாற்றுமாறு வேண்டினார்.

18-5-1940 திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, தமது 'தமிழர் சமயம்' நூலைக் கொடுத்தனுப்பினார்.

18-10-1940 நாளை மாநாட்டில் கொண்டுவரவிருக்கும் தீர்மானங்களைப் பற்றிப் பேச சுவாமி அருணகிரி, சுவாமி சண்முகானந்தா, திரு. வி. கலியாணசுந்த முதலியார், திருச்சி விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர்.

19-10-1940 அனைத்திந்திய தமிழ்ச் சமய மாநாடு பச்சை யப்பன் கல்லூரியில் நடைபெற்றது. உமாமகேசுவரன் பிள்ளை யவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள். திரு, சோம் சுந்தர பாரதியார் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி னார். முன்னாள் அமைச்சர் திரு. முத்தையா பிள்ளை தலைமைப் பொறுப்புக்கு என் பெயரை முன்மொழிந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும், செட்டி நாடு குமாரசாமிராஜா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசி வழி மொழிந் தனர். பின்னர் நான் நெடுவுரையாற்றினேன்.

L

20-10-1940 இன்றைக்கும் மாநாடு நடந்தது.நான் தலைமை ஏற்றேன். ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றத் தொடங்கிய போது சுயமரியாதை இயக்கத்தினர் குறுக்கிட்டுக் குழப்பம்

விளைவித்தனர்.

1941

8-1-1941 'வெஸ்ட் எண்டு' திரையரங்கு சென்று தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிய ஆங்கிலப் படம் பார்த்தேன். தமிழ்த் திரைப்படங்களைப் போல் ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்கு இன்பம் பயப்பதில்லை. ஏனெனில் அவற்றில் உரை யாடல்கள் தெளிவாக இருப்பதில்லை; பாடல்களும் இருப்ப தில்லை.

29-1-1941 தேவார இசையறிஞர் திரு. தண்டபாணி தேசி கர்க்கு இசைத் தொடர்பான சொற்கள் சிலவற்றுக்கு உரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/286&oldid=1592648" இலிருந்து மீள்விக்கப்பட்டது