உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

-30

மறைமலையம் - 30

தமிழ்ச் சொற்கள் தேவை என்று துரைவேலு கேட்டார். அவற்றுக்கு உரிய சொற்களைக் கூறினேன்.

4-3-1941 பல்லாவரத்தில் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து நாளும் நாற்றம் எடுக்கின்றது. காற்றும் மாசுபடுத்தப்பட்டு, மூச்சிழுப்பதே சிக்கலாகி விட்டது.

14-5-1941 கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரன் பிள்ளையவர்கள் வட இந்தியாவில் இத் திங்கள் 9அம் நாள் மறைந்த செய்தியறிந்து என் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அதன் செயலாளர் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கட்கு மடல் விடுத்தேன்.

23-6-1941 எனது 'Saiva Siddhanta as a Philosophy of Prac- tical Knowledge' நூலைத் திரு. சக்கரைச் செட்டியார் அவர்கட்கு அனுப்பி வைத்தேன்.

29-11-1941 புதுவை அரவிந்த

ஆசிரமத்திலுள்ள

திரு. ப. கோதண்டராமனுக்கு ‘ஞானசாகரம்’ 19ஆம் தொகுதி 1-6 இதழ்களும் அஞ்சலட்டையும் விடுத்தேன்.

18-12-1941 உணவுப் பொருள், விறகு ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து விட்டதால் இப்பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் உழைக்கும் ஏழை மக்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டுக் கடைத் தெருவைச் சூறையாடி யுள்ளனர். ஏழை மக்களுக்கு ஐரோப்பிய முதலாளிகள் உதவிசெய்யப் கூடாது என்று தடுத்த அதிகாரிகள் நையப் புடைக்கப்பட்டனர். இறைவன் ஏழை மக்கட்கு அருள் புரிந்து அனைவர்க்கும் அமைதி வழங்கட்டும்!

19427

13-1-1942 பவானந்தர் கழகத்துப் பண்டிதர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களிடமிருந்து தொல்காப்பியம்- சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம்- வரப்பெற்றேன்.

24-1-1942 ஜப்பானியர்க்கு அஞ்சி, சென்னை வாழ் மக்கள் தம் இருப்பிடங்களை விட்டு வேறிடங்கட்குப் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/287&oldid=1592650" இலிருந்து மீள்விக்கப்பட்டது