உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

255

13-3-1942 கல்லூரியில் என் மாணவர், தற்போதைய சன்னை மாநகராட்சியின் மேயர் திரு. சக்கரைச் செட்டியார்க்குப் பரிந்துரைக் கடிதம் தருமாறு துரைவேலு கேட்டார்.

16-6-1942 மதுரை மாலையில் அமெரிக்கன் கல்லூரிப் பண்டிதர் கார்மேகக் கோனாரவர்கள் வந்தார். அவர்தம் கருத்துகளும் என்றன் கருத்துகளும் ஒத்திருக்கக் கண்டேன்.

30-8-1942 இந்தியாவில் போர் ஆயத்தங்கள் பொது மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. உணவுப் பொருள்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஈசன் நம்மைக் காக்கட்டும்!

1-9-1942 மேதகு சென்னை ஆளுநரின் தலைமையில் க்டோரியா பொதுக் கூட்டத்தில் வரும் 6 ஆம் நாள் நடை பெறவிருக்கும் தேசிய வழிபாட்டுக் கூட்டத்துக்கு ஆளுநரின் சார்பில் என்னை அழைப்பதற்கென திரு. ஆல்பட்டு யேசுதாசு வந்தார்.

4-9-1942 மணிப்பொறிகளை ஒரு மணிநேரம் குறைத்து வைக்குமாறு அரசாங்கம் ஆணையிட்டுள்ளது.

6-9-1942 விக்டோரியா பொதுக் கூடத்திற்குச் சென்றேன். இராவ்சாகிபு யேசுதாசன் என்னை வரவேற்று, மேதகு ஆளுநர் அர்தர் ஓப் (Arthur Hope) அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், நேய நாடுகள் வெற்றி பெற வேண்டி, தேசிய வழிபாட்டுக் கூட்டம் தொடங்கிற்று. ஆளுநர் தொடக்க வுரைக்குப் பிறகு வழிபாட்டைத் தொடங்குமாறு என்னை வேண்டினர். வழிபாட்டை ஆங்கிலத்தில் நடத்தினேன். அப் பெருங் கூட்டத்தில் பல சமயத்தவரும் கலந்து கொண்டனர்.

3-10-1942 தண்டபாணி தேசிகரின் ‘பக்த நந்தனார்’ திரைப்படம் பார்த்தேன். சுந்தராம்பாளின் நந்தனார் படத்தைப் போல் இது அத்துணைச் சிறப்பாக இல்லை.

24-10-1942 ரூபாய்க்கு 2 படி 7 ஆழாக்கு என்ற அளவில் ஆறு ரூபாய்க்கு அரிசி வாங்கினேன். அரிசியும் பிற உணவு தானியங்களும் மிக அதிகமான விலைக்கு விற்கின்றன.. ஏழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/288&oldid=1592651" இலிருந்து மீள்விக்கப்பட்டது