உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 30

மக்கள் எப்படி உயிர் வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

31-10-1942 பெரிய புராண இடைச் செருகல்களைப் பற்றித் தம் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கென பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை என்னைக் காண வந்தார்.

1943

3-1-1943 செப்புக் காசுகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. பேராசைமிக்க வணிகர்கள் அவற்றைச் சேர்த்து வைத்து, போர்க் கருவிகளையும் குண்டுகளையும் செய்வதற்கென விற்று விடுகின் றனர். இவை கிடைக்கப் பெறாமையினால் ஏழைமக்கள் அல்ல லுறுகின்றனர்.

23-4-1943 ‘அம்பிகாபதி' என்னும் நாடகத்தை எழுதி வருகிறேன்.

16-9-1943 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் தலைமையில், தமிழ், தமிழரின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய சீர் குலைந்த நிலை பற்றி விரிவாக உரையாற்றினேன்.

26-10-1943 திரு. தேவநேயப் பாவாணரும், திரு. இராச மாணிக்கம் பிள்ளையும் வந்தனர். அடுத்த ஞாயிறு சென்னை யில் கூடவிருக்கும் தனித்தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு என்னைத் தலைமையேற்க வேண்டினர். நான் இணங்கினேன்.

1944

15-2-1944 காஞ்சி நாகலிங்க முனிவர் என்னைக் காண வந்தார். தமது எண்பதாண்டு விழாவை ஒட்டி என்னை வாழ்த்துரை எழுதித் தர வேண்டினார்.

.

3-3-1944 உடல்நலமின்மையால் சில காலமாக எழுதாது நிறுத்தி வைத்திருந்த 'அம்பிகாபதி அமராவதி' மீண்டும் எழுதத் தொடங்கினேன். இந்நூலை விரைவில் முடித்து, 'கோவலன் கண்ணகி' முதலான நூல்களை எழுத ஈசன் அருள் புரிவானாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/289&oldid=1592652" இலிருந்து மீள்விக்கப்பட்டது