உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்

257

10-3-1944 சுவாமி சிவானந்த சரசுவதி என்னைக் காண

வந்தார்.

21-4-1944 திரு. இராசமாணிக்கம் பிள்ளை தம் நண்பர் ருவருடன் வந்து, தமது ‘பல்லவர் வரலாறு’ நூலை எனக்குக் கொடுத்து விட்டுச் சென்றார்.

30-4-1944 என்

மகள் நீலாவின் கணவர் திரு. வ. திருவரங்கம் 28ஆம் நாளன்று மறைந்தார் என்னும் செய்தி வரப்பெற்றேன்.

12-8-1944 இராவ்சாகிபு கு. கோதண்டபாணி பிள்ளை என்னைக் காண வந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி, அவர்தம் நெடுநல்வாடை உரையையும், குறட்பாக்களையும் எவ்வெவ் வகையில் செழுமைப்படுத்தலாம் என்று சில கருத்துகளைக் கூறினேன்.

22-8-1944

Liberator இதழின் உதவி ஆசிரியர்

திரு. (கா.) அப்பாத்துரைப் பிள்ளை என்னைக் காண வந்தார்.

1945-46

17-2-1945

தொல்காப்பியப்

பதிப்பாசிரியர்

சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றிப் பாராட்டுரை எழுதி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த

அண்ணாமலைப்

திரு. என். சிவபாதசுந்தரனுக்கு அனுப்பி வைத்தேன்.

.

18-3-1945 திரு. பாரதிதாசனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. கா. அப்பாதுரைப் பிள்ளையும் அவருடன் வந்த அவர்தம் நண்பரும் வேண்டினர். நான் இணங்கவில்லை.

11-4-1945 முல்லைப் பதிப்பகம் திரு. முத்தையா தம் ந ண்பர்களுடன் என்னைக் காண வந்தார். என் நூல்களை வாங்கினார். பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ நூலைக் கொடுத்து, எனது கருத்தை எழுதி விடுக்குமாறு வலியுறுத்திக் கூறினார்.

13-4-1945 பாரதிதாசனின் நூலைப் பற்றி என் கருத்தை வெளியிட்டுத் திரு. முத்தையாவுக்கு மடல் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/290&oldid=1592653" இலிருந்து மீள்விக்கப்பட்டது