உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

9. காரைக்காலம்மையார் மனையறம்

நம் அருமைச் சைவசமயமானது காதலன்பின் வழி நடக்குந் தூய வாழ்க்கையினையே வேண்டுவதன்றி, அதனைக் கொலை செய்யுஞ் சாதிவேற்றுமை வாழ்க்கையினைச் சிறிதும் வேண்டுவதன் றென்பதற்கு நம் சைவ நாயன்மார் வரலாறுகளே சான்றாதல் சிறிது காட்டுதும். காரைக்கால் அம்மையார் என்னுஞ் சைவப் பெண்மணியாரின் வரலாற்றை முன்னர் ஆராய்வாம்.இவர் தெய்வத்தன்மை வாய்ந்த நங்கையாராதலுடன், தமிழ்மொழிக் கடலையும் ஆரப்பருகி அதன்கண் அரியபெரிய செய்யுள் நூல்களுள் இயற்றுந் திறம் வாய்ந்தவர். அழகிலோ கவல் கம்மியன் திருத்திச் சமைத்த அரும்பெறற் பொற்பாவையை ஒப்பவர். சின்னஞ் சிறு பருவம் முதலே சிவபிரான் திருவடிக்கண்ணுஞ் சிவனடியார் பாலும் மிக்க அன்பு பூண்டவர். இவ்வளவு சிறந்த ஒரு தெய்வமங்கைக்கு ஏற்ற கணவனை அவர் தாமே தெரிந்து காதலித்தல் வேண்டுமன்றிப், பிறர் அவர்க்கேற்ற ஒருவனைத் தெரிய மாட்டுவாரல்லர். அங்ஙன மிருந்தும் அவர்தஞ்” சுற்றத்தார் தம் வணிகமரபினான ஒருவனைக் கொணர்ந்து அவர்க்குக் கணவனாக மணம் பொருத்தி விட்டனர். அவ்வாறு மணஞ் செய்விக்கப்பட்ட அவன் அம்மையார் தம் அருமைகளை முன்னரே யறிந்து அவற்றிற்கு ஏற்பக் காதலன்பு பூண்டு நடக்கத் தக்க மாட்சி வாய்ந்தவன் அல்லலென்பது, அவரது தெய்வத் தன்மையை அறிந்த வளவில் அவன் அவரைத் தொடுதற்கு அஞ்சியிருந்து, பின்னர்ச் சிலநாட்களில் அவர் அறியாமே பிரிந்து வேறொரு நாட்டிற்குச் சென்று அங்கே வேறொருத்தியை மணந்து கொண்டிருந்தமையானும், அது தெரிந்த அம்மையாரின்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/67&oldid=1592046" இலிருந்து மீள்விக்கப்பட்டது