உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

35

உறவினர் அவரை ஒரு சிவிகையில் ஏற்றிக்கொண்டு அவனிருந்த ஊர்க்குப்போன காலையில் அவன் தன் இரண்டாம் மனைவி மக்களுடன் எதிர்போந்து அம்மையாரை மனைவியாக நிலையாமல் தெய்வமாக நினைந்து அவர்தந் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினமையானும் நன்கு பெறப்படும். அம்மை யாரும் அவன்பாற் காதலன்பு நிகழப்பெறாமற் கணவனென்ற கட மையை நினைந்து ஒருவாறு அன்புபூ ண்டெ ாழுகின ரென்பதற்கு. அவன் தன்னை வணங்கி நின்ற காலையில் அவன் பொருட்டுத் தாங்கிய அழகிய உடம்பின் வடிவைத் தசைப் பொதி என வெறுத்துக் கூறி அதனை மாற்றிப் பேய் வடிவு தனக்குத் தருமாறு அவர் இறைவனை வேண்டினமையே சான்றாம்; இஃது ஆசிரியர் சேக்கிழாரடிகள்,

1

“ஈங்கிவன் குறித்த கொள்கை இதுஇனி இவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்திங்குன்பால் ஆங்குநரின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு மென்று பரமனைப் பரவி நின்றார்”

எனக் கூறமாற்றால் தெளிப்படும். காதலன்பு என்பது ஓராவிற்கு இருகோடு தோற்றினாற்போல இருவருயிரும் ஓருயிராய் ஈருடம்பின் நின்று இயையும் பெருகிய தூய அன்பாகும். இஃது ஆசிரியர் நக்கீரனார் இறையனாராகப் பொருளுரையிற் கூறிய வாற்றானும், மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில்,

“காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம்இன்றி யாவையுமாம் மேகத் தொருவன் இரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வருமின்ப துன்பங்களே"

என்று அருளிச் செய்தமையானும் நன்கறியப்படும். இப்பெற்றித் தாகிய காதலன்பு காரைக்காலம்மையார்க்கும் அவர் தங் கணவனார்க்கும் நிகழப்பெறாமையால், அவர்தஞ் சேர்க்கை வெற்றுடம்பின் சேர்க்கையாயிருந்தே யல்லாமல், அன்பால் உருகி ஒன்றுபட்ட உயிரின் சேர்க்கையாய் இருந்ததின்று. அம்மையாரைப் போலவே அவனுங் கலைத்தமிழ்ப் புலமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/68&oldid=1592051" இலிருந்து மீள்விக்கப்பட்டது