உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

12. சாதி வேற்றுமை எவர்க்கும் ஆகாது

பெரியோரான

அவர்க்காயின் சாதிவேற்றுமை கடத்தல்தகும், சிறியோரான எமக்கோ அது தகாது என்பிரேற், சிறியோரான யாம் பெரியோராதல் எப்படி? பெரியோர் காட்டிய நன் முறையினைப் பின்பற்றி யொழுகினாலன்றோ யாமும் பெரியோராகலாம். அவர் காட்டிய நன்முறையினைப் பின்பற்றாது எந்நேரமுஞ் சாதிச்சண்டையிலேயே செருக்குற்று மாழ்குவமாயின் யாம் பெரியோராதல் எவ்வாறு கைகூடும்? அவர் காட்டிய பேரன்பு முறையினைக்கடைப் பிடியாது எந்நேரமும் அன்புக்கு மாறான வம்பிலேயே நாங்காலங் கழித்தால் நாம் பெரியோராதல் யாங்ஙனம் கைகூடும்? பெரியோர் செய்ததொன்று தகாததென நமக்குத் தோன்று மாயின், அதனை நாம் செய்யாது விடலாம். அப்பரும் அப்பூதியும் பேரன்பால் அளவளாவிச் சாதிவேற்றுமையினைப் பாராது ஒழுகியமுறை உயர்ந்ததா, தாழ்ந்தததா? தாழ்ந்த தென்று கூற எவருமே ஒருப்படாராதலால், உயர்ந்த அந்நன் முறையைப் பின்பற்றி நடத்தலால் நமக்குவரும் இழுக்கென்னை? எல்லா மக்களும் ஒரு தந்தையின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லா வற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியுங் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறு பாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி உலகிற் சீருஞ் சிறப்பும் எய்தி வருதலைக் கண்கூடாகக் கண்டுவைத்தும், நம் தெய்வ ஆசிரியர்கள் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று முடித்துக்கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவுஞ் சாதியிறு மாப்புப் பேச்சையே பேசிக், கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிறநாட்டவராற் பெரிதும் இழித்துரைக்கப் படுகின்றதன்றோ? சாதி வேற்றுமையால் நாம் பெற்ற நலம் என்னை? ஒரு சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/76&oldid=1592092" இலிருந்து மீள்விக்கப்பட்டது