உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

  • மறைமலையம் லயம் -30

நலமாயினும் இருந்தால் அதனை நாம் கைக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் தன்னையுயர்ந்த சாதியானாகச் செருக்குடன் உயர்த்துப்பேசிப் பிறனொருவனை இழிந்த சாதியானாக இழித்துரைக்குங்கால், அங்ஙனம் இழிக்கப்பட்டவன் எவ்வளவு மனம் நைகின்றான்! அவன் ஆண்மையுடையவனா யிருந்தால் தன்னை இழித்துப் பேசினவனைத் தானும் இழித்துப் பேச அதனால் இருவர்க்குள்ளுங் கலாம் விளைகின்றதன்றோ? வ்வாறு அன்பினைச் சிதைத்து ஒன்றுமையினைப் பாழ்படுத்துஞ் சாதிவேற்றுமையினை நம் ஆசிரியன்மா ரெல்லாரும் ஒருங்கே யுதைத்துத்தள்ளி அன்பின் வழியராய் நடந்துகாட்டியிருக்கையில், நாம் அவரைப் பின்பற்றாது போவோமாயின், அது நம் ஆசிரியர்க்குச் செய்த பெரும் பிழையாய் நம்மைச் சைவசமயத்திற்குப் புறம்பாக்குமென்று திண்ணமாய் உணர்மின்கள்!

அற்றன்று, நம் ஆசிரியர் நடந்துகாட்டிய முறைகளை நாம்

அவர் நிலைக்கு ஏதும் வரையிற் பின்பற்றலாகா தென்றுரைப்பீர்களாயின்; நம் ஆசிரியன்மார் அன்புக்கே உயர்வு கொடுத்துச் சாதிவேற்றுமையினைத் தாழ்த்தினால், நாம் அவர்க்கு மாறாய்ச் சாதிக்கு உயர்வு கொடுத்து அன்பைக் கீழ்ப்படுத்தல் வேண்டும்; அவர்கள் பொய்சொல்லாதே புறங்கூறாதே என்றால், நாம் பொய்சொல்லிப் புறங்கூறித் திரிதல் வேண்டும்; அவர்கள் குடியாதே, கொலை செய்யாதே யென்றால், நாம்குடித்துக் கொலைசெய்தல் வேண்டும்; அவர்கள் சிலவத்தை வணங்கு, அடியார்க்குத் தொண்டுசெய் என்றால், நாம்சிவத்தை வணங்காமல் அடியார்க்குத் தீமை செய்தொழுகல் வேண்டும். ஏனென்றாற் கீழ்நிலைக்கண் நிற்கும் நாம் மேல் நிலைக்கண் உள்ளார் சொன்னவைகளையுஞ் செய்தவைகளையும் ஏற்றல் கூடாதென்பது குருட்டுச் சைவர் கொள்கையன்றோ? ஆனால், இக்குருட்டுச் சைவர் கூற்றை நம்மனோர் கேட்டு அதன்படி நடக்கப் புகுவராயின் இந்நாடு காடாய், இந்நாட்டின்கண் உள்ள மக்கள் காட்டின்கண் உள்ள விலங்கின் கூட்டங்களாய் மாறுதல் திண்ணமாகலின், ஏனை நாடுகளிலுள்ள மக்களோடொப்ப நாமுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் அன்பிலும் ஒற்றுமையிலும் வாழ்க்கை யின்பத்திலும் மேன் மேல் முன்னேற்றம் அடைதலையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/77&oldid=1592096" இலிருந்து மீள்விக்கப்பட்டது