உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

13. செல்வப் பொருள் இயல்பு

"இன்பமும் பொருளும் அறனும்”

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த மூன்றில் முதற்கண் நின்ற இன்பத்தைப்பற்றி இதுகாறும் ஆராய்ந்தோம். இனி, இம்மைக்கண் நிகழும் இன்பவாழ்க்கையானது, வறுமையும் அதனால் வருந் துன்பமும் இன்றி இனிது நடைபெறுதற்கும், இங்ஙனமே மறுமையின்பத்தை வேட்டுச் செய்யப்படுவதாகிய தவவொழுக்கம் பிறருதவியை எதிர்பாராமற் செய்யப்படுதற்குஞ் செல்வப் பொருள் இன்றியமையாது வேண்டப்படுவதெனத் தொல்காப்பியர்,

6

“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே’

என்று கூறுதலானும், திருவள்ளுவனார்,

“அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு”

என்றும்,

66

அறன்ஈனும் இன்பமும் ஈனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்"

என்றுங் கூறுதலானுஞ் செல்வப் பொருள் ஈட்டும் வகையில் நம் ஆசிரியர் கொண்ட காண் கருத்தும் நம்மால் ஆராயற் பாலதாயிருக்கின்றது. செல்வப்பொருள் இங்ஙனம் இம்மை மறுமைப்பேறுகளை அடைவித்தற்கு இன்றியமையாக்கருவியா யிருத்தலானுங், கல்வியறிவு வாயாதவர் கட்கு அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/79&oldid=1592106" இலிருந்து மீள்விக்கப்பட்டது