உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

47

ஒழுங்கான நன்முறையில் ஈட்டும்வகையும், ஈட்டிய அப்பொருளை அவ்வாறே நன்முறையிற் செலவு செய்து இம்மை மறுமை யின்பங்களை எய்தும் வகையுஞ் சிறிதுமே விளங்கா. அதுவேயுமன்றி, ஒருகால் ஊழ்வினை வயத்தாற் கல்வி யறிவு வாயாதவர்கட்குச் செல்வம் வரின், அதனைப் பயன்படுத்தும் வழி தெரியாராய், அதனையே தெய்வமாகக்கொண்டு அவர் இம்மை மறுமை நலங்களை ஒருங்கே இழந்துவிட்டுச் சிலநாளில் அப்பொருளை இங்கேயே வைத்துவிட்டு இறந்தொழிதலையும், அவர்க்குப் பின் அப்பொருளைக் கைக்கொள்வோர் குடிக்குங் கூத்திக்குங் கொலைக்குங் கோணவழக்குக்கும் வெறும் பட்டப் பெயர்க்கும் வாரியிறைத்து அதனைச் சிலநாட்களில் அழித்துவிடுதலையுங் கண்ணெதிரே காண்கின்றேம். ஆகவே, நிலையில்லாத செல்வப் பொருளை நன்முறையில் ஈட்டுதலும், அதனை நன்முறையிற் பயன்படுத்தலும் நிலையான சிறந்த சிறந்தமுறையிற் பெற்றார்க்கன்றி ஏனையோர்க்குக் கைகூடாமை எளிதில் அறியப்படும்.

கல்விப்பொருளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/80&oldid=1592112" இலிருந்து மீள்விக்கப்பட்டது