உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

14. கல்விப்பொருள் மாட்சி

இவ்வுண்மையை நன்றாகப் பாகுபடுத்துணர்ந்த நம் முன்னோர்கள் பொருளைப்பற்றிப் பேச வருங்கா லெல்லாம், அதனைக் கல்விப்பொருள் செல்வப்பொருள் என இரு கூறாகப் பகுத்து, முதலிற் கல்விப்பொருள் மாட்சியினை வலியுறுத்திப் பேசி, அதன்பிறகே செல்வப் பொருளைப் பற்றிப் பேசாநிற் கின்றனர். இது, நம் முதலாசிரியரான தொல்காப்பியனார் இவ்விருவகைப்

பொருளையும் பெறும் பொருட்டு

இளைஞர்கள் வேறு நாடு நோக்கிச் செல்லும் பிரிவுகளில் நூல் ஓதுதற்குப் பிரியும் பிரிவை முன்வைத்துப், பொருள்தேடுதற்குப் பிரியும் பிரிவை அதன்பின் வைத்து “அகத்திணையிய" லிற் பிரிவிலக்கணம் வகுத்துரைத்தமையானும், அவர்வழி வந்த திருவள்ளுவ நாயனாரும் அங்ஙனமே பொருட்பாலிற் கல்வியை முன்வைத்து; அதற்குப் பல அதிகாரங்கள் கடந்துபோய்ச் செல்வத்தைப் பின்வைத் துரைத்தமையானும் நன்கறிகின்றேம். எனவே, ஒருவர்க்கு எஞ்ஞான்றும் அழியாப் பெருஞ் செல்வமாவதுந், தன்னைப் பயின்றாரை எழுபிறப்புந் தொடர்ந்து செல்வதுந், தன்னைத் தொடர்ந்து பயில்வார்க்கு அம்முறையே அவரறிவினை மேலும் மேலும் விளங்கச் செய்வதுந், தன்னைப் பயின்றவரையே கண்ணுடையவராக்கித் தன்னைப் பயிலாதவர் கண்ணைப் புண்ணெனச் செய்வதுங் கல்விச் செல்வமே என்பார்,

“கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை

என்றும்,

66

,,

'ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/81&oldid=1592117" இலிருந்து மீள்விக்கப்பட்டது