உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

49

6

எனவும்,

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

எனவும்,

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்”

எனவுந் தெய்வத் திருவள்ளுவரும் ஓதியருளினார். ஆரிய நூலார் பொருளற்ற கர்மங்கட்கும் பிறப்பினாற் சாதிக்கும் உயர்வு சொல்லுதல் போல், நம் ஆசிரியர் எவருஞ் சொல்லாமையும், நம் ஆசிரியர் எல்லாருங் கல்விக்கே உயர்வு சொல்லிக் கல்வி கல்லாமற் சாதிபற்றி உயர்வு தேடுவார்க்கு இழிவு சொல்லுதலும், ஆரிய நூலார் ஒரு சில வகுப்பினரே கல்வி கற்றற்குரியர், ஏனையோர் அதற்குரியரல்லர் என்று சொல்லுதல் போலாது, நம் ஆசிரியன்மாரெல்லாருங் கல்வி கல்லாதவர் எவராயிருப்பினும் விலங்குகளை

யொப்பரென வலியுறுத்தலும்:

அவர்

“மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு”

என்றும்,

(திருக்குறள்)

“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று

கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே”

என்றும்,

“கல்லார் நெஞ்சின்

நில்லான் ஈசன்

என்றும்,

66

“கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்

கற்றார்கள் உற்றோருங் காதலானை

وو

(திருமந்திரம்)

(சம்பந்தர் தேவாரம்)

(அப்பர் தேவாரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/82&oldid=1592122" இலிருந்து மீள்விக்கப்பட்டது