உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

66

மறைமலையம் - 30

-

(திருக்குறள்)

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்”

என்றும் போந்த அவர்தம் அறிவுரைகளால் தெளியப்படு கின்றன அல்லவோ?

நம் ஆசிரியன்மாரே யன்றிப் பண்டைநாளில் இருந்த நம் தமிழ் வேந்தர்களுங் கல்விக்குங் கற்றார்க்கும் உயர்வு தந்து வந்தனரே யல்லாமற் சாதி முதலிய பிறிது ஏதும் பற்றி எவர்க்கும் உயர்வு கொடுத்தனரல்ல ரென்பதற்கு,

“உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோள் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே."

என்று பாண்டி வேந்தனான ஆரியப்படை கடந்த நெடுஞ் சழியன் கல்வியையுங் கல்வியையுங் கற்றாரையும் உயர்த்திச் சாதி யுயர்வினைக் கீழ்ப்படுத்துரைத்தமை ஒருபெருஞ் சான்றாய் விளங்குகின்றதன்றோ? இன்னும், முன்னொருகால் மோசிகீரனார் என்னும் நல்லிசைப் புலவர், சேரமான் தகடூரெறிந்தபெருஞ் சேரலிரும்பொறை என்னும் வேந்தர் பெருமானது அரண்மனைக்குட் சென்றபோது, அங்கே அவ் வேந்தனது முரசு வைக்குங் கட்டில் மிக மெல்லியதாய் அழகிதாயிருக்கக் கண்டு, அதன்கட்படுத்து உறங்கினால் எத்துணை இனிதாயிருக்குமென நினைந்து, அதன்மே மேலறிச் சிறிது படுத்தவர், அதன் மென்மையால் அயர்ந்து உறங்கி விடுவாரானார், அப்போது அங்கு வந்த அவ்வேந்தர் பெருமான், தன் தூயகட்டிலின்மேல் அவர் படுத்துறங்குதலைக் கண்டு சிறிதுஞ் சினங்கொள்ளானாய் அதற்கு மகிழ்ந்தோ L டமையாது, அவர் இன்னும் இனிதாய் உறங்கல் வேண்டுமென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/83&oldid=1592127" இலிருந்து மீள்விக்கப்பட்டது