உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

51

விரும்பி அருகிருந்த ஒரு ரு கவரி கொண்டு அவர்மேல் மென்காற்றுப்பட நின்று வீசுவானானான்; இதற்குள் விழித்தெழுந்த அப்புலவர் பெருமான் அவ்வரசன்றன் பேரன்பினையும் பெருந்தமைமையினையும்

“மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலியொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஙையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூங் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை அதூஉஞ் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் அதனொடும் அமையாது அணுகவந்து நின் மதனுடைய முழவுத்தோள் ஓச்சித் தண்ணென வீசி யோயே! வியலிடங் கமழ

இவண்இசை யுடையோர்க் கல்லது அவனது உயர்நிலை யுலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குரிசில்நீ ஈங்கிது செயலே'

யன்பைப்

என்று அவன்றன் தமிழ்மொழி பெரிது பாராட்டினார். இங்ஙனமே தமிழ் கற்ற சான்றோர்க்கு அக்காலத்திருந்த சேர சோழ பாண்டியர்கள் பல வகைளால் உதவி செய்து அவர்களைச் சிறப்பித்த வரலாறுகளை எடுத்துரைக்கப் புகுந்தால் அதற்கு நேரங்காணாது; ஆயினும் ஒன்றே யொன்று காட்டல்வேண்டும். கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமான் "பட்டினப்பாலை' யென்னுந் அருந்தமிழ்ப் பாட்டொன்றைப் பாடிக்கொண்டு சென்ற போது, அதன் சொற்சுவை பொருட் சுவையினைக் கண்டு வியந்த சோழவேந்தனான கரிகாற்பெருவளத்தான் அவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/84&oldid=1592131" இலிருந்து மீள்விக்கப்பட்டது