உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

  • மறைமலையம் - 31

விளைக்கும் மற்றொரு கூட்டத்தாருடன் போராடி அவரை அழித்துவிட்டுத் தாமே அறிவும் இன்பமும் பெற்று வாழல் வேண்டு மென்னும் நோக்கத்தாலன்றோ? ஒவ்வோர் ஆண்மகனும் பெண் மகளும், எல்லா வுயிர்க்கும் வந்திருக்கும் இப்பிறவியின் நோக்கத்தையும் பயனையுஞ் சிறிதாயினும் ஆராய்ந்து பார்ப்பார்களானால், தாம் அறிவும் இன்பமும் பெறுதலில் ஆராவேட்கை யுடையராயிருத்தல் போலவே, ஏனையுயிர் ஒவ்வொன்றும் அங்ஙனமே அவற்றைப் பெறுதலின் அடங்கா வேட்கை யுடையவாய் இருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். நாம் அறிவும் இன்பமும் பெறுதற் பொருட்டு, நமக்கு ஆகாத உயிர்களின் பிறவியை அழித்து விடுதல் எவ்வளவு தீயதென்பது, நம்மைப் பிறர் அழிக்க வருங்காலன்றோ நடுக்கத்துடன் நமது உணர்வுக்குப் புலனாகின்றது? ஆகவே, எந்த உயிரின் பிறவியையும் அழியாமல், நமது பிறவியின் பயனை நாம் அடைய முயலுதலே நமக்கும் பிறர்க்கும் அறிவையும் இன்பத்தையும் பெருகச் செய்தற்கேற்ற வழியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/101&oldid=1592827" இலிருந்து மீள்விக்கப்பட்டது