உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

12. கொல்லா அறம்

இந்த வழியை முதன்முதற் கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன்மக்களாய் இருந்த ஒரு பெரும் பகுதியாரே யென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. மக்கட் பிரிவினர் ஒவ்வொரு வரினும் மேன்மக்களுங் கீழ்மக்களும் இருந்தாலும், தமிழரில் மேன் மக்களைத் தவிர, மற்றை மக்கட் பிரிவினரிலுள்ள எந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்; இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்,

“எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும்"

(பொருள் அதிகாரம் 223)

என்று மொழிந்தமையால் அறியப்படும். எல்லா உயிரும் இன்பத்தையே அவாவி நிற்றலின், எந்த உயிரின் பிறவியையும் அழித்து, அதற்குத் துன்பத்தை விளைத்த லினுங் கொடியது பிறிதுண்டோ சொல்லுமின்! இக் கொடுமையை நன்குணர்ந்தே தமிழ் மேன்மக்கள் எந்தப் பிறவியையுங் கொல்லுதலும் ஆகாது, ஒரு பிறவியைக் கொன்று அதன் ஊனைத் தின்னுதலும் ஆகாது என்னுங் காள்கையை விடாப் பிடியாய்க் கொண்டு நிற்கலாயினர். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்”

என்றும்

(குறள் 260)

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று”

(குறள் 323)

என்றும் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே கொல்லா அறத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறி யிருத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/102&oldid=1592828" இலிருந்து மீள்விக்கப்பட்டது