உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 31

6

டைப்

காண்க. தமிழ் மேன்மக்களில் இக்கொல்லா வறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினவர்கள் வேளாளர்களே யென்பது "பட்டினப்பாலை” என்னும் பழைய பாட்டினால் நன்கறியப் படுகின்றது. இவர்கள் முழுமுதற் கடவுளைச் சிவம் என்னும் பெயரால் அழைத்து வணங்கி வந்தமையின், இவர்கள் இடை பட்ட காலத்திருந்து சைவர் எனவும் பெயர் பெறலாயினர். இவர்கள் கைக்கொண்ட கொல்லா வறமும் அவ் வேளாளர் வழியே ‘சைவம்' என வழங்கப்பட்டு வருகின்றது. புலாலுணவு விட்டவரைச் “சைவ மாயினர்” என வழங்கும் வழக்கும் இன்று காறும் நடைபெற்று வருகின்றது கொல்லாவறஞ் சமண் சமயத்தார்க்கே சிறப்பாகச் சொல்லப் படினும், புலவுத் துறந்தாரைச் சமணர் என்றுரை யாமற், சைவர் என்றே எல்லாரும் வழங்கி வருதலை உற்று நோக்குங்கால், இத் த் தென்றமிழ் நாட்டிற் சமண சமயத்தார் வருதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னே தொட்டுச் சைவ வொழுக்கத்திற் றலை நின்றவர் சைவசமயத்தவரான வேளாளர்களே யென்பது தெற்றெனப் புலனாகின்றது. சைவ சமயத்தில் நின்ற மேன் மக்கள் எல்லாரும் உயிர்க் கொலையினைப் பெருந் தீவினை யாகக் கருதி அதனைப் பிறர் செய்யாமல் விலக்குதற்குப் பெரிது முயன்றமை, மேற் காட்டிய திருக்குறளால் மட்டுமேயன்றி, அதற்குப் பின்வந்த ஆசிரியர் முதுமொழிகளாலும் இனிது விளங்கா நிற்கும் மாப்பெருந் தவமுனிவரான ஆசிரியர் திருமூலர்,

“கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே'

எனவும்,

“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் றூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்

மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/103&oldid=1592829" இலிருந்து மீள்விக்கப்பட்டது