உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

  • தமிழர் மதம்

79

எனவும் மிக அச்சுறுத்தி அறிவுதெருட்டினர். அவர்க்குப் பின்வந்த சைவசமயாசிரியரான சுந்தரமூர்த்தி நாயனாரும்

“கொன்றுசெய்த கொடுமையாற்பல சொல்லவே

நின்றபாவ வினைக டாம்பல நீங்கவே சென்றுசென்று தொழுமின்றேவர் பிரானிடங் கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே"

என்று கொலைப்பாவத்தின் கொடுமை நீங்குதற்கு வழி காண்க. அவர்க்குப்பின் வந்த பட்டினத்

காட்டினமை

தடிகளும்,

“கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற்

குத்திரங் கோள்களவு

கல்லாமற் கைதவ ரோடிணங்

கர்மற் கனவிலும் பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற்

றோகையர் மாயையிலே

செல்லாமற் செல்வந் தருவாய்

சிதம்பர தேசிகனே'

என்று கொலை புலை முதலான தீவினைகளைக் கடிதல் வேண்டி இறைவனைத் தொழுதனர். அவர்க்குப் பின்வந்த தாயுமான அடிகளும்,

“கொல்லா விரதங் குவலயமெல் லாமோங்க எல்லார்க்குஞ் சொல்லுவதென் னிச்சை பராபரமே

எனவும்,

“கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே”

எனவுங் கூறிக் கொல்லா அறத்தை எங்கும் பரவச் செய்த லிற் றமக்குள்ள பெருவிருப்பினையும், அவ்வறத்தைக் கடைப் பிடித்தாரை யன்றிப் பிறரை நல்லாரென்று கருதத் தமதுள்ளம் ஒருப்படாமையினையும் நன்கெடுததுத் தெரிவித்தமை காண்க. அவர்க்குப் பின்வந்த இராமலிங்க அடிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/104&oldid=1592830" இலிருந்து மீள்விக்கப்பட்டது