உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் - 31

“மருவாணைப் பெண்ணாக்கி யொருகணத்திற்

கண்விழித்து வயங்கு மப்பெண்

ணுருவாணை யுருவாக்கி யிறந்தவரை

யெழுப்புகின்ற வுறுவ னேனுங்

கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேலெங்

குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை

ஞானியெனக் கூறொ ணாதே

எனக் கூறி, ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் உருமாற்றி இறந்தவரை உயிர் பெற்றெழச் செய்யும் அத்தனை ஆற்றல் ஒருவர் உடையரேனும், எள்ளளவும் இரக்கமின்றி ஓருயிரின் உடம்பை வாளால் வெட்டி அதன் ஊனை அவர் தின்பாராயின் அவரை ஞானியெனச் சொல்லுதல் ஆகாது என்று கொல்லா வறத்தின் மேன்மையையும் அஃதல்லா மறத்தின் கீழ்மை யையும் எத்துணை அழுத்தமாக விளம்பி யிருக்கின்றார்! இவை கொண்டு, பண்டைக் காலம் முதல் இன்றைக்காலம் வரை வந்த தமிழாசிரியரும், அவர் தம் மெய்யுரை வழிநின் றொழுகிய வேளாண் மாந்தரும், இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் இனிது நடைபெறுதற்கு இன்றி யமையாத தான கொல்லா அறத்தினை முதன்முதற் கண்டறிந்து, அதனைத் தமக்குரிய முதற்பெருங் கொள்கையாகக் கடைப் பிடித்து வரலாயின ரென்பது இனிது விளங்கா நிற்கும்.

பண்டைத்தமிழ் மேன்மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற் கண்டு, அதன்கண் வழுவாதொழுகினவர் என்பத தென்னை? வடக்கிருந்த சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலாயினாருங் கொல்லாவறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினவரல்லரோ வெனின்; சமணர் சாக்கியர் முதலான அவரெல்லாம், ஆரியர் வருதற்கு முன்னமே இமய மலை வரையிற் பரவி நாகரித்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ் மேன்மக்களின் மரபில் வந்தவரே யென்பது ஆராய்ச்சியாற் புலனாதலின், பண்டைத் தமிழ் மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற் கண்டா ரென்னும் எமதுரை சிறிதும் பிறழாது. சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலா யினாரெல்லாந் தமிழ் மேன்மக்களாதலினாற்றான் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/105&oldid=1592831" இலிருந்து மீள்விக்கப்பட்டது