உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

81

எல்லாருந் தமது நாட்டிற் குடியேறிய ஆரியரின் உயிர்க்கொலை வேள்விகளைப் பெரிதும் அருவருத்துப் பேசி, அவ்வேள்வி களை நுவலும் ஆரியவேத நூல்களையும் ஏசிவிடுவாராயின ரென்க.

அற்றேற், பழைய யூதமதத்தினரும் ஊன் உண்ணா நோன்பின்கண் நின்றவரேயென்பது அவர்க்குரிய விவிலிய வேதப் பழைய ஏற்பாட்டின் முதன்மறைப் பகுதியாலும், ஐசாயா தானியேல் முதலான முனிவர்கள் அருளிச்செய்த அருளுரை களாலும் நன்கு பெறப்படுதலின், தமிழ் மேன்மக்களே கொல்லா அறத்தினை முதன்முதற் கைப்பற்றி யொழுகினாரென்றல் யாங்ஙனமெனிற், கூறுதும், பண்டைக் காலத்தே மேனாடு கீழ்நாடுகட்குச் சென்று வாணிகம் நடாத்தினவர், இன்றைக் காலத்திற் போல, வேளாள வணிகரே யாவர். இவர்களே இருக்குவேத காலத்திற் ‘பணிகர்’ என்றும், பாபிலோனியர் காலத்திற் ‘பிநீசியர்' என்றுஞ் சொல்லப்பட்டவராவர்.

இவர்கள் தாம் வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளிலும் புலாலுண்ணா ஒழுக்கத்திற் றவறா திருந்தமை யால், இவர்களைப் பார்த்து அயல் நாடுகளில் இருந்த மக்களில் எவரோ ஒரு சிலர் புலால் மறுத்த ஒழுக்கத்தைக் கைப்பற்றி நின்றாராகலின், அவர்களின் வழியே கொல்லாவறம் விவிலிய வேத முதன்மறையிலும், வேறு சில இடங்களிலும் உயர்த்துச் சொல்லப்பட்டு நிலைபெற லாயிற்று. அவ்வளவேயன்றி, யூதர்களில் மேன் மக்களாயிருந்தா ரனைவருங் கொல்லா வறத்தைக் கைக் கொண்டு ஒழுகினவரல்லர். யூதர்கள் கொல்லா வறத்தின் மேன்மை கண்டு அதனை அவரில் மேலோராயினார் கைக் கொண்டு ஒழுகியிருந்தாற், சைவ வேளாளர் பெருந் தாகை யினராய்த் தமிழ் நாட்டில் இன்றைக்கும் உயிர்வாழ்ந்து வருதல் போல மேனாடுகளிலும் ஊனுண்ணா மக்கள் பெருந் தொகையினராய்க் காணப்படுதல் வேண்டும். அவ்வாறின்றி அங்குள்ளார் அனைவரும் இன்றுகாறும் ஊனுணவு கொள்பவ ராகவே வாழ்நாட் கழித்து வருதலின், அவரெல்லாங் கொல்லா அறத்திற்கு உரியரல்லரென்பது தேற்றமேயாம். ஆகவே, தமிழ் மக்களில் மேலோராயிருந்த வேளாளரே முதன் முதற் கொல்லா அறத்தின் விழுப்பம் உணர்ந்து, அதனைக் கடைப்பிடியாய்க் காண்டொழுகி னோராவரென்னும் உண்மை ஆணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/106&oldid=1592832" இலிருந்து மீள்விக்கப்பட்டது