உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பெறு

மறைமலையம் - 31

திறமாய்க் கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு, காண்டு, இம்மை வாழ்க்கையின் நிலையினையும், அஃது எதற்காக நடை கின்றதென அதன் நோக்கத்தினையும் நன்காராய்ந்து பார்த்துக்,கொல்லா அறத்தின் கட் பிறழாது நின்று வாழ்க்கை செலுத்துவதே, ஆறறிவுடைய சிறந்த மக்கட் பிறவியினர்க்கு இரக்கமும் அன்பும் அருளும் ஒருங்கு அளாவிய அற வாழ்க்கை யாகும் என்றுணர்ந்து கைக்கொண்ட முதற் பெருங் கொள்கையே தமிழர் மதத்திற்கு இன்றியமையாப் பேர் உறுப்பாய்ப் பிறங்குகின்ற தென்பது உணரற்பாற்று.

ச்

அஃதுண்மையே யாயினும், இத்தென்றமிழ் நாட்டில் உயிர் வாழுந் தமிழரில் வேளாளர் என்னும் ஒரு வகுப்பாரைத் தவிர மற்றையோ ரெல்லாரும் ஊன் உண்பவராகவேயிருத்த லாலும், இச் சிறிய தமிழ் நாட்டிற்குப் புறம்பேயுள்ள பெரும் பெருந் தேயங்களில் உறையும் பெரும்பெருந் தொகையினரான மக்கட் பிரிவினர் அனைவரும் ஊனுண் வாழ்க்கையினராகவே யிருத்தலாலும் இம்மை வாழ்க்கைக்குச் சிறந்தது கொல்லா வறமே என்று கூறுதல் பொருந்துமோவெனிற், கூறுதும்.

உயிர்களுக்கு இப்பிறவி கொடுக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், இவர்கள் இயற்கையாகவே மறைக்கப்பட்ட அறிவினராயும் அதனாற் பல குற்றங்களுடையராயும் இருத்தல் எளிதிற் புலனாகா நிற்கின்றது; இவ்வுடம்பொடு கூடிய உயிர் வாழ்க்கை நீள நீள இவ்வுயிர்கட் குள்ள அறியாமையுஞ் சிறிது சிறிதாக விலகியொழிய அவர் களது அறிவும் வர வர விளக்க முடையதாகி விரிதலுறுகின்றது; அங்ஙனம் அறிவு விளங்க விளங்க அவர்கள்பால் உள்ள குற்றங்களும் வரவரக் குறைந்து போகின்றன; ஆகவே, இப்பிறவி கொடுக்கப் பட்டதன் நோக்கம், அறியாமையை அகற்றி அறிவைத் துலக்கிக் குற்றங் குறைகளைத் தொலைப்பதற் கேயாமென்பது நன்கு விளங்கா நிற்கின்றதன்றோ? இங்ஙனம் அறிவு விளங்குதற்குங் குற்றங்கள் நீங்குதற்கும் பேருதவி செய்யுங் கருவியான இவ்வுடம்பு ஆறறிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு இன்றியமையாததாய் இருத்தல் போலவே, ஆறறிவிற் குறைந்த எல்லாச் சிற்றுயிர்கட்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/107&oldid=1592833" இலிருந்து மீள்விக்கப்பட்டது