உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் - 31

ஒறுத்து அடக்குதற்கு ஏன் அவ்வளவு முயல் கின்றனர்! ஆகவே, எத்துணைக் கொடிய குற்றங்களையுந் தாங் குற்றமாக நினையாமற் செய்வாரும், தாஞ்செய்யுங் குற்றத்தில் ஓர் எள்ளளவு பிறர் செயக் கண்டால், அவரை வெறுக்கின்றமை நாடோறும் மக்கள் வாழ்க்கையிற் காணப்படுதல்போல, மக்களெல்லாரும் உயிர்களின் உடம்பை வெட்டி அதன் ஊனை மிசைந்து வருதல் கண்டு, அன்பும் அருளும் இரக்கமும் ஒருங்கு குடிகொண்ட நல்லோர்கள் அங்ஙனஞ் செய்வாரை அருவருப்பரேயன்றி அவரை ஒரு சிறிதும் பாராட்டுவாரல்ல ரென்பது தெளியப்படுமென்க. எனவே, குற்றமான ஒரு கொடிய செயலை எல்லாருஞ் செய்தல் கண்டு அதனைக் குற்றமெனக் கருதாமை பகுத்தறிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு அடுத்த தன்று, மக்கள் அல்லாத விலங்குகளும் ஏனைச் சிற்றுயிர்களுமே து குற்றமானது, இது குற்றமாகாதது எனவும், இது நல்லது, இது தீயது எனவும், குற்றத்தைத் தீயதை விலக்கிக் குற்ற மல்லாததை நல்லதை யாங் கைப்பற்றக் கடவே மெனவும் பகுத்தறிந்து பார்க்கமாட்டாதனவாகும். மற்றுப், பகுத்தறிவு பெற்ற மாந்தர்களாகிய நாமும் அவ்வறிவினைப் பயன் படுத்தாமல் நடப்பமானால், நாம் இச் சிறந்த பிறவியினைப் பெற்றது எதற்கு? உண்டுடுத்து உறங்கிக் கழிவதற்கா? எனச் சிறிதாயினும் நினைந்து பார்த்தல் வேண்டும்.

L

இனி, த் தென் றமிழ் நாட்டில் உள்ள வேளாளரைத் தவிர, இந்நிலவுலகத்தின் மற்றைப் பெருந் தேயங்களில் வாழும் மாந்தர்கள் எல்லாருங் கொலைத் தொழிலைச் செய்துஞ் செய்வித்தும் அதனாற் கிடைக்கும் ஊனைத் தின்பவர்களாகவே யிருந்தாலும், அறிவும் ஆராய்ச்சியும் நாளுக்கு நாட் பெருகா நின்ற இக் காலத்தில் மக்களுயிர் வாழ்க்கைக்கு இசைந்த நல்லுணவு யாதென்ன ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் பேரறிஞரும் அவரைப் பின்பற்று வாரும் அயல் நாடுகளிலுந் தொகை தொகையாய்ப் பெருகி, ஊனுணவு ஒருவகைக் கொடிய புளிப்பு நஞ்சு (Uric acid) கலக்கப்பெற்றதா யிருத்தலின் அது மக்களுடம்புக்கு ஒரு சிறிதும் இசையாதென்றும், அதனால் ஊனுணவு கொள்வார்க்கு, இருமல் எலும்புருக்கி மலக்கட்டு மார்புவலி வயிற்றுளைச்சல் பிளவை நீரிழிவு முதலான பல பொல்லாத நோய்கள் வருகின்றனவென்றும், புளிப்பு நஞ்சு

சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/109&oldid=1592835" இலிருந்து மீள்விக்கப்பட்டது