உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரு

  • தமிழர் மதம்

85

இல்லாத மரஞ் செடி கொடிகளின் இலை பூ காய் கனி கிழங்கு வித்து பால் முதலான சைவ சைவ உணவுப் உணவுப் பொருள் களைச் செரிக்கும் அளவாய் உட்கொண்டு வருவார்க்கு நோய் இல்லா இனிய வாழ்க்கையே நீண்டு வருகின்றதென்றும் அறிவித்து கின்றனர். அவர்தம் அரிய அறிவுரைகளைக் கேட்டு ஊனுணவை அறவே விலக்கிச் சைவவுணாப் பொருள் களையே உட்கொண்டு இனிது வாழ்க்கை செலுத்துவார் தொகையும் இங்கிலாந்து அமெரிக்கா பிராஞ்சு ஜர்மனி முதலான அயல் நாடுகளிற் பெருகி வருகின்றது. இன்னும் அறிவாராய்ச்சி மிக்க சான்றோர் கூட்டமும் அவர்வழி நிற்பார் குழுவும் மிகுந்து வருந்தோறும், இம்மாநில மெங்குந் தமிழர்தம் முதற்பெருங் காள்கையாகிய கொல்லா அறமும் புலால் மறுத்த சைவவொழுக்கமே பரவி நிலைபெற்று விளங்கு மென்பது

திண்ணம்.

இன்னும், தமிழ்மக்கட் குரிய கொல்லாவறம், அவர்கள் பண்டைக்காலத்தே வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளில் இருந்த அறிஞர்களாலும் மிகச் சிறந்ததாகக் காணப்பட்டு, அவர்களால் அக் காலத்திலேயே தழுவப் பட்டமை அத் தேய வரலாறுகளால் நன்கறியக் கிடக்கின்றது. இற்றைக்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன்னமே நாகரிக வாழ்க்கையில் மிக்கு விளங்கிய' எகு பதியருடைய சமய நூல்களும் எதியோப்பிய ருடைய சமய நூல்களும் ஊனுணவை அறவே விலக்கிவிடல் வேண்டுமென்று கட்டளையிடுகின்றன.

2

அவர்க்குப்பின் நாகரிகத்திற் றலைசிறந்து விளங்கிய கிரேக்கரும் உரோமரும், கட்குடி கூடாவொழுக்கங்களைக் கைக்கொண்டு தம் அருமை பெருமைகளை இழப்பதற்கு முன், காய் கனி கீரை கம்பு பால் முதலான சைவ உணாப் பொருள்களையே உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். உரோமரிற் சிலம்பம் பழகுவார் வாற்கோதுமை அப்பமும் எண்ணெயுமே உட்கொண்டு வந்தனரென்றும், அவ்வுணவு அவர்கட்கு நரம்பு வலிவினையும் எதனையுந் தாங்க வல்ல ஆற்றலினையுந் தந்தது என்றும் இற்றைக்கு இரண் டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்த இப்போகிரட்டீஸ் என்னும் மருத்து நூலாசிரியர் வரைந் திருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/110&oldid=1592836" இலிருந்து மீள்விக்கப்பட்டது