உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மறைமலையம் - 31

3 எழுதி

இம் மாநிலத்து மாந்தரிற் பெருந் தொகையினர் உறையுந் தேயங்களான சீனம் சப்பானில் உள்ள பௌத்த மடங்களிற் பெருங் கூட்டமாய் உயிர் வாழுந் துறவிகள் எந்த வகையான ஊனுணவும் எடாமையொடு, வெண்ணெயும் பாலுங்கூட உட் காள்வதில்லையென்றும் அவர்களின் துறவு வாழ்க்கையை நேரே சென்று கண்ட ஆங்கில ஆசிரியர் ஒருவர்3 எ யிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே அயல்நாடுகளிற் பண்டை நாளிருந்த அறிஞர்கள் தமிழரின் கொல்லாவறத்தைத் தழுவி யொழுகிய வரலாறுகளை யெல்லாம் எடுத்துக்காட்டப் புகுந்தால் இது மிக விரியும். இவ்வாற்றால், தமிழரின் கொல்லாவறம் இக் காலத்திற் போல அக்காலத்தும் அயல் நாடுகளிலிருந்த அறிஞர்களாற் சிறந்த தொன்றாகத் தழுவப் பட்டதேயன்றி, அஃதவர்களால் விலக்கப்பட்டதில்லை யென்பதை அன்பர்கள் கருத்திற் பதித்தல்வேண்டும்.

மேலும், மாந்தர்கள் கடைப்பிடித் தொழுக வேண்டிய அறங்களை யெல்லாம் எடுத்தோதிய ஆசிரியர் திருவள்ளுவர், அவ்வெல்லா அறங்களுள்ளும் மிகச் சிறந்தனவாகக் கொல் லாமை, பொய்யாமை என்னும் இரண்டனையுமே பிரித்துக் கூறிப், பின் அவ்விரண்டனுள் ளும் முதல் வைக்கற்பாலது கொல்லாமை. அதன்பின் வைக்கற்பாலது பொய்யாமை எனக் கிளந் தெடுத்துரைத்தார். அஃது,

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று”

( குறள் 323)

என்னுந் திருக்குறளால் இனிது விளங்கா நிற்கின்றது. இவ்வாறு திருக்குறளைப்போற் கொல்லா அறத்தை, இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, ஏனையெல்லா அறங்களுக்குந் தலையாய முதலிடத்தே தனி வைத்துரைத்த ஓர் அறநூலை, வேறு எந்த அயல் நாட்டு மத நூல்களுள்ளுங் காண்கிலேம். விவிலிய மறை இம்மை யொழுக்கத்திற்குரிய அறங்களைக் கூறுகின்றுழிக் கொல்லாமையை முதல் வைத் துரைப்பினும், அது கூறிய கொல்லாமை யென்பது ஆறறிவுடைய மக்களைக் கொல்லாமை யென்றே அதற்கு உரைவகுத்தார் பலரும் உரைப்பக் காண்டலின், அதன்கட் சிற்றுயிரைக் கொல்லாமை யும் அடங்குமென்று உறுதிப் படுத்திக் கூறுதல் இயலாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/111&oldid=1592837" இலிருந்து மீள்விக்கப்பட்டது