உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

13. காதலன்பு

ங்ஙனம் இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் நிலைபெறுதற்கு இன்றியாமையாததான கொல்லாவறம், பண்டைக்காலம் முதல் இன்றைக்காலம் வரையிலுள்ள தமிழரில் மேன்மக்களுக்கு முதற்பெருங் கொள்கையாய்த் திகழ்ந்தாற் போலவே, அதற்கடுத்த படியாக இம்மை வாழ்க்கை இனிது நடைபெறுதற்கு இன்றியமையாததான இல்லொழுக்கம் மிகவுந் தூயதான அன்பையே தனக்குயிராக் கொண்டு நிகழ வேண்டு மென்பதுதான் தமிழரின் இரண்டாவது கொள்கை யாதல் பண்டைச் செந்தமிழ் நூல்களால் அறியக் கிடக்கின்றது. கணவனும் மனைவியுங் காதலன்பிற் பிணைந்து நடத்துவதே இல்லொழுக்கமாகும். கணவனும் மனைவியுங் கூடுங் கூட்டம் இல்லையானால் இல்லொழுக்கமே இல்லை. இல்லொழுக்க மில்லையானால் இம் மண்ணுலகில் மக்கள் எவருமே இரார். ஆண் பெண் பாலார் ஒன்று சேராத நிலை இன்றுமுதல் ஒரு நூற்றாண்டு வரையில் இந் நிலவுலகில் நிலைத்து விடுமானால்,

வொரு நூற்றாண்டுக்குப் பின் இம்மாநிலத்தில் மக்கள் எவருமே இரார் என்பது திண்ணமன்றோ? ஆனால், அங்ஙனம் நேர வொட்டாது அன்பும் இன்பமும் மக்களில் எத்துணை நெஞ்சத் திட்பம் உடையாரையும் பிணித்துப் பொருத்தி வைக்கின்றது. ஏனென்றால், அன்பும் இன்பமும் மக்கள் இருவரின் சேர்க்கையிலேதான் நிகழ்வனவாயிருக்கின்றன. அம் மக்களுள்ளும் ஆண் பெண்பாலாரின் சேர்க்கையே தொடர்பான உண்மையன்பிற்கும், தொடர்பான இன்ப நுகர்ச்சிக்குங் கருவியாயிருக்கின்றது. இவ்வாய்மை கண்டே ஆசிரியர் தொல்காப்பியனார் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே ஆண் பெண்பாலாரின் சேர்க்கையை நுவலும் 'அகத்திணையியலை” முன் வைத்து, அவரல்லாத ஏனைப்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/113&oldid=1592839" இலிருந்து மீள்விக்கப்பட்டது