உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

89

பிறரின் சேர்க்கையை நுவலும் “புறத்திணையியலை" அதன்பின் வைத்துப் பொரு ளோத்தினை அருளிச் செய்தார். அவர்க்குப் பின் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் திருக்குறள் இயற்றிய ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும் முதலில் ஆண் பெண்பாலார் சேர்க்கையினை விதந்து கூறும் “இல்லறவியலை' முன்வைத்து, ஏனையோர் சேர்க்கையினைக்

"பொருளியலை" அதன் பின் வைத்திட்டார் என்பது.

கூறும்

இன்னும், அன்பின் வழியது இன்பம் அன்பில்லா விடத்து நிகழ்வது துன்பம். உலகியல் நடைபெறுதற்கு இன்றி யமையாததான ஆண் பெண் பாலாரின் சேர்க்கை தொடர்ந்து நிகழ வேண்டுமானால், அதனை இறுகப் பிணித்து நடத்துதற்குக் காதல் அன்பென்னுங் கயிறு இருவருள்ளத்தினின்றுமே தோன்றி அவரை இணைக்க வேண்டும். ஓர் ஆண்மகன் தன்னாற் காதலிக்கப்பட்ட ஒரு பெண்மகளையும், ஒரு பெண்மகள் தன்னாற் காதலிக்கப்பட்ட ஓர் ஆண்மகனையும் மணந்து வாழ்க்கை செலுத்துதல் வேண்டுமென்பதே பண்டைத்தமிழ் மேன்மக்களின் கொள்கையாயிருந்தது. பொன்னுக்கும் மண்ணுக்கும் புகழுக்குந் தலைமைக்குங் குலத்திற்கும் புதல் வர்க்கும் அவாவுற்று அன்பில்லா ஆடவரும் மகளிரும் மணஞ் செய்து கொள்வார்களானால், அவர்களது வாழ்க்கை பல்வகைக் குற்றங்களுடையதாய் நிலைகுலைந்து போகும்.

“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று’

(குறள் 78) என்று ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த அறிவுரை என்றும் மறக்கற்பாலதன்று. பண்டைத் தமிழ் மக்கள் வேறெதனையுங் கருதாது காதல் ஒன்றனையே மேலதாய்க் கருதிக் காதன் மணமே செய்து வந்தனரென்பது,தொல்காப்பியம், அகநானூறு, திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான பழந் தமிழ் நூல்களாலும், சைவ சமயா சிரியராகிய சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கை வரலாற்றி னாலும் நன்கு புலனாகின்றது.

காதலன்பு இல்லாவழி மகளிர்க்குக் கற்பொழுக்கம் நிலை பெறுதல் அரிது. தமிழ் மக்கள் மகளிரது கற் பொழுக்கத்தையே மிக மேலதாய்க் கருதினவர்களென்னும் உண்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/114&oldid=1592840" இலிருந்து மீள்விக்கப்பட்டது