உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் - 31

“உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினுஞ்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று"

(குறள் 54)

எந்னுந் தொல்காப்பியர் உரையானும் (தொல்காப்பியம், களவியல், 22),

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்”

(குறள் 57)

என்னுந் திருவள்ளுவர் உரையானும் நன்கு தெளியப்படும் மகளிரது கற்பொழுக்கத்தைக் காத்து நிலைபெறுவித்தற்கு, அவர் தங் காதலர்மேல் வைத்த உண்மைப் பேரன்பே துணைசெய்யுமல்லது, வேறு காவலுங் கட்டுப்பாடுந் துணை செய்யா வென்பதூஉம் பண்டைத் தமிழ்மக்களால் நன்கு

தெளியப்பட்டதாகும்: அது,

“சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை'

என்னுந் திருவள்ளுவர் திருக்குறளாலும், கணவன் மாய்ந்தவழித் தீப் பாயப் புகுந்த பூதப் பாண்டியன் றேவியைச் சான்றோர் தடுத்தும் அதற்குடம்படாது தீப் பாய்வாள் பாடிய புறநானூற்றுச் செய்யுளாலுந் தெற்றெனப் புலப்படும். இங்ஙனந் தம்முள் உண்மைக் காதலன்பு மீதூர்ந்த ஆடவர் மகளிரையே வேறு காரணங் கருதாது இல்லற வாழ்க்கையிற் படுப்பித்தனர் பழந்தமிழ் மக்களென்பது கருத்திற் பதிக்கற்பாற்று.

இனி, ஆரியரது ஒழுகலாற்றைத் தழுவிய வடநாட்ட வர்கள் இத் தென்றமிழ் நாடு புகுந்து வைகியபின், தமிழரது காதன் மணஞ் சிறிது சிறிதாக் கைவிடப்பட்டுக், குலஞ் செல்வந் தலைமை முதலான காரணங்களையே முதன்மை யாகக் கொண்ட அன்பற்ற போலி மணம் வழக்கத்தில் நிகழ்ந்து வரலாயிற்று. இத்தகைய போலி மணத்திற் சுற்றத் தாராற் புகுத்தப் பட்டமையினாலேயே காரைக்காலம்மையாரின் இல்லறவொழுக்கம் பாழ்பட்டது. ஒரே குலம் என்னுங் காரணம் ஒன்றேபற்றிக், காரைக்காலம்மை யாருக்குத் தக்கவன் அல்லாத, அவரால் விரும்பப் படாத ஒருவன் அவருக்குக் கொழுநனாகப் பிணைக்கப்பட்டமையினாலேயே அவரது இல்லற வொழுக்கம் நடைபெறாது சிதைந்து போயிற்று. சுந்தரமூர்த்தி நாயனார்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/115&oldid=1592841" இலிருந்து மீள்விக்கப்பட்டது