உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் - 31

6

மக்கள் பூவாமுன்னம் மணங் கூடல் வேண்டுமே என்னும் ஏக்கத்தாற், கணவராகக் குறிப்பிடப்பட்ட ஆடவர் நெஞ்சிரக்கந் தினைத்தனையுமின்றிக் கேட்கும் பெருந் தொகைப் பொருளுக்குத், தம் உடைமைகளை யெல்லாம் விற்றும், அதுவும் போதாமற் கடன் வாங்கியுங் கொடுத்துப் பெண்களைப் பெற்றவர்களில் எத்தனை ஆயிரம் பேர் முதுமைக் காலத்தில் வறியராகிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து துன்புற்று இறந்து போயினர்! போகின்றனர்! காதலன்பு எட்டுணையுமின்றி, அஃதில்லாமை யின் நெஞ் சிரக்கமும் அடியோடில்லையாகி, மேலுமேலும் பெரும் பொருள் கொண்டு வரவில்லையே யென்று தம் மனைவி யரைக் கரும்பாலையில் வைத்துக் கசக்கிப் பிழிவதுபோல் வருத்தி, அதனால் அவர் தங் கற்பினை யிழந்து காலங் கழிக்கவோ, அல்லது குளங் கூவல்களில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளவோ கட்டாயப் படுத்திவிட்ட, கட்டாயப் காயப்படுத்திM படுத்தி வருகின்ற கணவன்மார் எத்தனைபேர்! தேவர்கள் எத்தனைக் கொடிய செயலும், எத்தனை நடுவிகந்த செயலும், எத்தனை நெஞ்சிரக்கமற்ற செயலும் வெறும் பொருளின் பொருட்டுச் செய்யலாம் போலும்! இரக்க நெஞ்சமில்லாக் கயவர்களே எத்துணைக் கொடிய செயலுஞ் செய்ய வல்லார். அங்ஙனமே தேவர்களுஞ் செய்வரானால் அவரை என்னென்று சொல்வோம்! இவ்வகையிற் றேவருங் கயவரும் ஒரு தன்மையரே யாதல் கருதிப் போலுந் திருவள்ளுவ நாயனார்,

6

"தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்

(குறள் 1023)

என்றருளிச் செய்தார். சிறுபெண்கள் மங்கைப்பருவம் அடையும் முன் பெரும்பொருள் கொடுத்து அவர்களை மணஞ் செய்விக்குங் கொடிய பார்ப்பன வழக்கத்தையுந் தொலைத்தற்கு நம் நாட்டு அறிஞர்கள் பெரும்பாடு பட்டுச் சட்டஞ் செய்திருப்பது மிகவுங் கொண்டாடற் பாலதாகும். அச் சட்டப்படி நம் நாட்டவர் அனைவரும் வழுவாமல் நடக்குமாறு நாம் நம் பொதுமக்களுக்கு நல்லறிவு புகட்டி வருதல் நமக்கு இன்றியமையாப் பெருங் கடமையாகும்.

இனி, நமது நாட்டிற் பண்டைக் காலத்தே காதன் மணமே நடைபெற்று வந்தமையின், தங் காதற் கணவரை இழந்த மகளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/117&oldid=1592843" இலிருந்து மீள்விக்கப்பட்டது