உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

93

பின்னர் வேறு ஆடவரை மணக்க இசை யாராய்க் கைம்மை நோன்பு நோற்றே காலங் கழித்தன ரென்பது புறநானூறு முதலான பழைய தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது.

மற்று, ஆரியரது நடைமலிந்த வடநாட்டிலோ காதன் மணம் பெரும்பாலும் நடவாமையின், அங்கிருந்த மகளிர் தங்கணவர் இறந்தபின், அவருடன் பிறந்தாரை மணந்து காள்ளும் வழக்கம் பண்டு நடைபெற்றது (இந்நாளிலும் அவ்வழக்கம் நடைபெறுதலை யாம் வடநாடு சென்ற காலத்திற் சில இடங்களில் நேரே கண்டேம்). அது மாபாரதம், சாந்தி பர்வத்தில் (2749) வீடுமர் கூறும் மொழி யாலும் அறியப்படும். மேலும், கணவன் உயிரோ டிருக்கை யிலோ, அல்லதவன் இறந்த பின்னோ மகப்பெறாத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப் பெற்றுக் கொள்ளலாமென்று மநுமிருதி (9,59,60,61) வெளிப்படையாய்க் கூறுதலால், கற்பற்ற அவ்வொழுக்கம் வடநாட்டவரிற் பொதுவாயிருந்தமை தெளியப்படும்.

னி, இஞ்ஞான்றைத் தமிழ்மக்கள், பார்ப்பனரைப் பார்த்துக், குலவேற்றுமை மிகுதியாய்ப் பாராட்டிக், காதலன்பு நிகழப் பெறாத ஆடவரையும் மகளிரையுங் கட்டாய மணத்திற் புகுத்திவருதலின், அதிற்புகுந்த ஆண் பண் பாலார் பெரும்பாலுந் துன்பவாழ்க்கையிலேயே பெருந்துயர் உழந்து மாய்கின்றனர். அல்லது, ஒத்த அன்பு நிகழாத தம் வயிற்றின்றும் நற்குண நற்செய்கை வாயாத நோய்கொண்ட புதல்வர் புதல்வியரைப் பெற்று உலக வாழ்க்கைக்கே பெருந்தீமையை விளைவிக்கின்றனர். இத்தகையவர் வேறு வேறு பிரிந்து, தாந்தாம் விரும்பியவரைத் திரும்ப மணஞ்செய்துகொண்டு நன்கு வாழ்தற்கு வேண்டும் உதவிகள் செய்தலும் நம்மனோர்க்கு இன்றி யமையாத கடமையாகும்.

6

இன்னும், கணவரை இழந்த மாதரிற் றிரும்ப மணஞ் செய்துகொள்ளும் விருப்ப முடையார்க்கு ஏதொரு தடையும் ஏதொரு தீங்குஞ் செய்யாது, அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்து வாழ உதவி செய்தல் வேண்டும். இத் தென்னாடு ஓர் ஆலிலை மூக்கை யொப்பச் சிறியது. இத்துணைச் சிறிய இந்நாட்டிலிருக்கும் நம் மக்களின் தொகையும் மிகச் சிறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/118&oldid=1592844" இலிருந்து மீள்விக்கப்பட்டது