உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 31 ×

மற்று, ஆலிலையை யொப்ப மிகப் பெரிதான இம் மாநிலப் ம் பரப்பில் உறையும் பலகோடி மக்களின் தொகையோ மிகமிகப் பெரியது. இத்துணைப் பெருந்தொகையினரான ஏனை மக்களிற் கணவரை இழந்த மகளிர் திரும்ப மணஞ்செய்துகொண்டு, இனிது வாழா நிற்கையில், அவர்களை நோக்க மிகச் சிறு கூட்டத்தாரான நந் தமிழ்மாதர்மட்டுந் திரும்ப மணஞ் செய்து கொள்ள இடம்பெறாமல் தடைசெய்யப்பட்டுத், தம் வாழ்நாள் முடியும் மட்டும் அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாயிருந்து பெருந்துயர் உழக்கச் செய்வது, ஈரநெஞ்சமுடையார் செயலாகுமா?

“தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்

(குறள் 318) என்ற தமிழ்முறைப்படி, தம் முயிர்க்கு ஒரு சிறு துன்பம் வரினும் அதனைப்பொறாத ஆடவர், நம் அருமைப் பெண் மணிகளை அவர்தம் வாழ்நாள் எல்லையளவுந் துன்பக் கடலில் அழுத்தி யலைப்பது அருளுடையார் செயலாகுமா? தம் மனைவியர் மாய்ந்த அன்றே வேறு மாதரை மணக்க முயலும் நம் ஆடவர், கணவரை இழந்த மகளிரை மட்டும் மறுமணஞ் செய்யாவாறு கட்டுப்படுத்தி வைத்துக் கலங்கச்செய்தல் என்ன கொடுமை! ஆகவே, பெண்டிர் ஆடவர் என்னும் இருதிறத்தார்க்குரிய இன்பதுன்ப நிலைகளையும் நடுநின்று சீர்தூக்கிப் பார்த்து, இருவரையும் இன்பவாழ்க்கையில் இருத்தி வாழச்செய்வதே அறிவும் அன்பும் அருளும் உடைய மேலோரது செயலாகு மென்று உணர்மின்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/119&oldid=1592845" இலிருந்து மீள்விக்கப்பட்டது