உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் - 31

பைங்கூழை அடியோடு அழித்துவிடுவது திண்ணம். மற்றுத், தம்முடைய பொருளையெல்லாந் தமக்கு மட்டுமென்றே வரைந்து வைத்துக் கொள்ளாமல், தாஞ் செல்லும் நாடுகடோறு முள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத்தினரின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தி, எல்லாருங் கல்வியிலுங் கலைத்துறைகளிலும் தேர்ச்சி பெற்று பெற்று இனி னிது வாழ

இடைவிடாது முயன்று வருதலினாலன்றோ நம் ஆங்கில நன்மக்கள் இவ்வுலக மெங்கணுஞ் செங்கோலாட்சி செலுத்தி நாளுக்குநாள் பிறைமதிபோற் பெருகி வாழ் கின்றனர். அவர்களைப் பார்த்தாயினும் நம் தமிழ் மக்கள்,

“மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை

என்று

பேராசிரியர்

(குறள் 244)

அறிவுறுத்திய

நம் பழந்தமிழ்ப் அருளுரையினைக் கடைப்பிடித்துத், தம் மக்களுக்கென்றே செல்வப் பொருள் சேர்த்து வைக்குஞ் சிறுசெயலை யொழித்து, அவர்க்குக் கேடில் விழுச்செல்வமாகிய கல்விப் பொருளையே மிகுத்துக் கொடுத்துத், தமது செல்வப் பொருளை முப்பத் திரண்டு அறங்களுக்கும் பயன்படுத்தித் தம் முன்னோர் தம் விழுமிய கோட்பாட்டின்வழி யொழுகு வாராக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/137&oldid=1592865" இலிருந்து மீள்விக்கப்பட்டது