உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

17. மறுமை வாழ்க்கை

.

இனி, ஐந்தறிவு மட்டுமே வாய்ந்த சிற்றுயிர்த் தொகைகளுக்கு வாயாத ஆறாம் அறிவாகிய ஆராய்ச்சியறிவு வாய்ந்த மக்கள், உண்டு உடுத்து உறங்கி இன்புற்று இறந் தொழிவதாகிய இம்மை வாழ்க்கையளவிலே மனவமைதி பெற்று நிற்பவர்களாய் இல்லாமல், இனி வரக் கடவதாகிய மறுமை வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்தறிவதில் அடங்கா வேட்கையுடையவர்களாய் முனைந்து நிற் கின்றனர். மக்களைப் போலவே எல்லாச் சிற்றுயிர்களும் இரைதேடித் தின்றும், ரைதேடிய இளைப்புத் தீர உறங்கியும், ஆணும் பெண்ணுங் கூடி இன்புறுதற்குரிய சிற்சில காலங்களில் இன்புற்றும், அதிலிருந்து தத்தங் குழவிகளை ஈன்று வளர்த்தும், பின்னர்ச் சிறிது காலத்தில் உயிர் மடிந்தும் போனாலும், அவைதம்மிற் குழவிகள் பெரியனவாய் விட்டால் அவை தமக்கும் அவை தம்மை ஈன்ற தாய் தந்தைக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாமற் போகின்றது; ஆனால், ஆறறிவுடைய நம் மக்களுள்ளோ அவ்வாறு தொடர்பற்றுப் போகவில்லை; அவர் இறக்குங் காறும் அன்பின் றொடர்பு நீண்டு செல்கின்றது. தம் புதல்வர் புதல்விகள் நோயும் மிடியுங் கொண்டு துன்புறக் கண்டால் அவர்க்கு அவற்றைத் தீர்த்துதவி செய்யத் தாய் தந்தையர் உள்ளந் துடிதுடிக்கின்றது. தாய் தந்தையர் முதுமையாலும் நோயாலும் பொருள் தேடமாட்டாமையாலும் உடலும், உயிருஞ் சோர்ந்து வருந்தக் கண்டால், அவர்க்கு அவ் வருத்தத்தைத் தீர்த்துதவி செய்யப் புதல்வர் புதல்வியர் நெஞ்சம் பதைபதைக்கின்றது. எல்லார்க்கும் எல்லா வுயிர்க்கும் பசியாலும் நோயாலும் பற்பல துன்பங்கள் வருகின்றன; ஆனால், மக்களைத் தவிர. மற்றைச் சிற்றுயிர்கள் ஒன்றற் கொன்றுதவியாய் நின்று அவற்றைத் தீர்த்துக் கொள்ள வழி தேட மாட்டா. மக்கள் மட்டுமே தமக்கு வருந் துன்பங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/138&oldid=1592866" இலிருந்து மீள்விக்கப்பட்டது