உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் - 31

ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று தீர்த்துக் கொள்ள முயற்சி செய்பவர்களாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னென் றால், மக்களுள் தொடர்ந்து நிகழும் அன்பே காரணமாய் இருக்கின்றது. சிற்றுயிர்கள் தமக்கு வருந்துன்பங்களை ஒன்றற்கொன்றுதவியாய் நின்று தீர்த்துக் கொள்ளாமை அவை தம்முள் தொடர்ந்த அன்பு நிகழாமையினாலேயாம். ஆகவே, துன்பத்தை நீக்க எழுவது தொடர்ந்த அன்பென்றே அறிதல் வேண்டும்.

வ்வாறு மக்கள் உயிர்வாழும் இம்மை வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழுந் துன்பமும், அதனை நீக்குதற்குத் தூண்டும் அன்பும், அதனால் விளையும் அறிவும் துன்ப இம்மை வாழ்க்கையின் வேறாக இன்ப மறுமை வாழ்க்கை ஒன்றுண்டென மக்களுக்கு அறிவுறுத்தி, அவர் அதனை அவாவுமாறு செய்கின்றன. மாந்தர்க்கு வருந்துன்பங்க ளெல்லாம் பசி விடாய் காமம் என்னும் மூன்று காரணங் களின் வழியே வருகின்றன. இத்துன்பங்க ளெல்லாம் பிறருதவியின்றி, அப் பிறர் வழியே வரும் பிறபொருட் சேர்க்கையின்றித் தாமாகவே நீங்குவன அல்ல. பசி தீர உணவும், விடாய் தீர நீரும், காமந் தீரச் சேர்க்கையும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இம் மூன்றால் வரும் மூன்று துன்பங்களும் இம்மூன்று வகையால் தீரா விட்டால், இந்நிலவுலகில் மக்களே இரார், விலங்குகளும் ரா, புற்பூண்டுகளுந் தலைக்காட்ட மாட்டா. இம் மூன்று துன்பங்களையும் நீக்கவல்ல சோறுந் தண்ணீருஞ் சேர்க்கையுந் தொன்றுதொட்டே இங்கமைந்திருக்கின்றன. ஆனாலும், முதன்முதல் நம்மக்களுயிர் அவைகளைத் தாமாகவே தேர்ந் தெடுத்துக் கொண்டு அத் துன்பங்களை நீக்கிக்கொள்ள மாட்டா. ஈன்றணிய பசுங்குழவி பசியாலும் விடாயாலும் எவ்வளவு துன்புற்று, எவ்வளவு துடிதுடித்து அழுகின்றது! அந்நிலையில் அது தானாகவே தன் பசியையும் விடாயையும் நீக்கும் பாலைத் தேடியெடுத்துப் பருகவல்லதா? அதனை ஈன்ற தாய் அதன் பசித்துன்பங் கண்டு மனம் பொறாளாய் நெஞ்சங் கசிந்து அதனை யடுத்தணைத்துத் தன் கொங்கைகளிற் சுரந் தொழுகும் பாலமிழ்தினை ஊட்ட உண்டன்றோ அஃது அவ்வாற்றொணாத் துன்பம் நீங்கப் பெறுகின்றது? இவ் வுலகத்துள்ள எண்ணிறந்த கோடி மக்களுயிர்களும் மற்றைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/139&oldid=1592867" இலிருந்து மீள்விக்கப்பட்டது