உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

115

சிற்றுயிர்களுமெல்லாம் முதன்முதற் றமது உயிர் வாழ்க்கை யினை இங்குத் துவங்கும்போதே துன்பத்திற் றுவங்கி, உடனே தாயினுதவியினா லன்றோ அத்துன்பம் நீங்கப் பெறுகின்றன? துவக்கத்திலேயே பசித்தும் விடாய்த்துந் துன்புறுஞ் சிறு குழவிகளைத் தாய்மார் கருதிப் பாராமலும், பால் கொடாமலும் இருந்து விடுவார் களானால், நாமெல்லாம் வளர்ந்து பெரியராகி இங்கே ஒருங்கு குழுமியிருந்து உயர்ந்த

பொருள்களை நினைக்கவும் பேசவுங் கூடுமா? சிறதுங் கூடாதே. ஆகவே, தாம் ஈன்ற குழவிகளைத் தம்முயிரினும் மேலாய்க் கருதித் தாய்மார் அவற்றிற்குப் பசித்த போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து பால் ஊட்டுமாறு செய்ததெது? தன்மகவு நோய் காண்டு துன்புறுந் காலங்களில்ெலாம் ஊணுறக்கமின்றி இரவும் பகலும் அதனருகே காத்திருந்து அதற்கு மருந்து தேடிக் கொடுத்து அதன் றுன்பத்தை நீக்குமாறு அதன் தாயை ஏவியது எது? தன் மகவு வளர்ந்து இளைஞனான போதும், அதுவுந் தாண்டி ஆண் மகனானபோதும், அதுவுந் தாண்டி முதியனான போதும், தொடர்ந்த அன்பு மீதூரப்பெற்று அவ்வந் நிலையிலுந் தன் மகனுக்கு வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்யுமாறு அவன் தாயைத் தொடர்பாகத் தூண்டி வந்தது எது? அவள் தன் பிள்ளையின்மீது தன் நெஞ்சத்தே இயற்கை யாய் எழப்பெற்ற அன்பேயன்றோ?

இனித், தாய்தான் என்செய்வள்! தந்தையின் சேர்க்கை யின்றித் தாயின் வயிற்றில் மகவுதான் தோன்று மாறு யாங்ஙனம்? தந்தையின் சேர்க்கையாற் றாய்வயிற்றி னின்று தான் தோன்றிய பின்னும், தன்னையுந் தன் அன்னை யையும் ஏதுங் குறையின்றி வைத்துப் பாதுகாப்பவன் யாவன்? தகப்பனேயன்றோ? நாள் முழுதும் வெளியே சென்று தான் கற்ற கல்வியைப் பிறர்க்குக் கற்பித்தும், தன் அரசனுக்காகப் படைக்கலந் தாங்கிச் சென்று தன்னுயி ரையும் பொருட்டாகக் கருதாது போராண்மை புரிந்தும், உழவே வாணிகமே கைத்தொழிலே யென்பன பல நடாத்தியும், பிறர்க்கேவலாளாய் அவரிட்ட ய் ஊழியம் பல செய்தும் பலவாற்றால் அல்லல் உழந்து பொருள் தேடித் கொணர்ந்து தன் மனைவியையும் மகவையும் பாதுகாப்பவன் யாவன்? தகப்பனே யன்றோ? அவன் அங்ஙனமெல்லாம்

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/140&oldid=1592868" இலிருந்து மீள்விக்கப்பட்டது